கண்கள் மிக அழகாக மிளிர சில அழகு குறிப்புகள்!

கண்கள் மிக அழகாக மிளிர
கண்கள் மிக அழகாக மிளிரpixabay.com
Published on

சிலருக்கு காலையில் எழுந்ததும் இமைகளும், கண்களுக்கு கீழும் வீங்கி இருக்கும். அவர்கள் தூங்கும் போது முகத்தை தலையணையில் அழுத்தித் தூங்குவதாலும், சரியாகத் தூங்காததாலும் தான் இந்த வீக்கம் ஏற்படுகிறது. முகத்தில் ஒப்பனை செய்து கொண்டாலும் வீக்கம் போகாது. இதை சரி செய்ய சில வழிமுறைகள்;

1. தூங்கும் போது தலைக்கு ஒரு தலையணையும், அருகில் ஒரு தலையணையும்  வைத்து தூங்குவது நல்லது. இதனால் தூக்கத்தில் புரண்டு படுக்கும் போது பாயிலோ அல்லது படுக்கை விரிப்பிலோ முகமோ கண்களோ அழுந்தாது.

2. ஒரு ஐஸ்கட்டியை மெல்லிய வெள்ளைத்துணியில் வைத்து சுற்றி, கண்களை சுற்றியுள்ள இடங்களில் மென்மையாக மசாஜ் செய்தால், கண்வீக்கம் குறையும்.

3. நாம்  உபயோகப்படுத்தி தூக்கி எறியும் கிரீன் டீ பைகள் கண்களுக்கு அழகு தரும். கிரீன் டீ பையை உபயோகித்து முடித்ததும் தூர எறியாமல் அதை ஃப்ரீசரில் சேமித்து வைக்க வேண்டும். கண்களைச் சுற்றி உள்ள பகுதிகளும் கண் இமைகளும் வீங்கி இருந்தால் இந்த சில்லென்ற கிரீன் டீ பேக்கை எடுத்து கண்களை மூடி 15 நிமிடங்கள் கண் இமைகளின் மீது வைத்திருந்தால் அந்த வீக்கம் குறைந்து கண்கள் அழகாக  மிளிரும்.

4. கற்றாழையின் முட்களையும்,தோலையும் செதுக்கி விட்டு உள்ளிருக்கும் வெள்ளை நிற ஜெல் பகுதியை எடுத்து கழுவிவிட்டு, கண்களின் மேல் வைத்திருந்தால், வீக்கம் குறைந்து விடும்.

மஸ்காரா போடும் முன்
மஸ்காரா போடும் முன்pixabay.com

மற்ற சாதாரண நாட்களில் கூட  கற்றாழை ஜெல்லை கண்களின் மேல் வைத்து வருவது, கண் இமைகள், மற்றும் கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அழுக்குகளைப் போக்கி, முகத்தை பொலிவாக்கும்.

மஸ்காரா போடும் முன் மஸ்காரா பிரஷில் உள்ள மையை ஒரு டிஷ்யூ பேப்பரால் சுத்தமாக துடைத்து விட்டு பயன்படுத்தலாம். மஸ்காரா போடும் போது அது கண்களில் உள்ள இமை முடிகளைத் தாண்டி உள்ள பகுதிகளிலும் மஸ்காரா ஈஷிக்கொண்டு விடும். அதனால் ஒரு டிஷ்யூ பேப்பரை  கண்களுக்கு அடியிலும், கண்களின் மேற்புறத்திலும் வைத்துக்கொண்டு மஸ்காரா போட்டால், பிற இடங்களில் மை படியாது.

லிப்ஸ்டிக் உபயோகிப்பவர்கள் கவனத்திற்கு;

லிப்ஸ்டிக் உபயோகிப்பவர்
லிப்ஸ்டிக் உபயோகிப்பவர்pixabay.com

வெளியில் செல்லும்போது லிப்ஸ்டிக் அணிந்து விட்டு வீட்டுக்கு வந்ததும் அதை முறையாக அகற்ற வேண்டும். சிலர் உதடுகளில் துணி வைத்து அழுத்தி துடைப்பார்கள். இதனால் உதடுகள்  வீங்க நேரலாம். அதற்கு பதிலாக இரண்டு மூன்று சொட்டு தேங்காய எண்ணெய் மற்றும் சிறிதளவு நாட்டு சர்க்கரையை எடுத்து இரண்டையும் நன்றாக கலக்கி லிப்ஸ்டிக் மீது தடவி, ஒரு டிஷ்யூ பேப்பரால்  துடைத்து விட வேண்டும். லிப்ஸ்டிக் கறை நீங்கி விடும்.

கைகளுக்கு நெயில் பாலிஷ் போட்டு அது விரைவில் காய வேண்டும் என்று நினைத்தால் நெயில் பாலிஷ் போட்டு முடித்ததும் ஒரு கிண்ணத்தில் ஐஸ் வாட்டர்ரை நிரப்பி கைகளை அதில் வைத்தால் விரைவில் காய்ந்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com