பெண்கள் அழகை பராமரிக்க இயற்கையான சில 'இயற்கை அழகு குறிப்புகள்'!

பெண்கள் அழகை பராமரிக்க இயற்கையான சில 'இயற்கை அழகு குறிப்புகள்'!

  1. அரிசி கழுவிய நீரில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்காமல் உள்ளிருக்கும் அதிக எண்ணெய் மற்றும் கரும்புள்ளிகளையும் அகற்றும்.

  2. முகம் பளபளக்க புதினா சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் வெந்நீரில் கலந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஆவி பிடித்தால் அழுக்குகள் அகன்று சுத்தமாகவும் வசீகரமாகவும் இருக்கும்.

  3. கசகசாவை ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீருடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசிக்கொண்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.

  4. தினமும் சீரகத் தண்ணீர் குடித்து வந்தால் முகத்தில் பருக்கள் வராது.

  5. குளிர்ந்த நீர் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதனோடு பால் சேர்த்து துணியில் தொட்டு முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி விடவும். இதை தொடர்ந்து செய்வதால் முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறும்.

  6. தக்காளி வெள்ளரிக்காய் இவைகளை நன்றாக அரைத்து இதனுடன் முல்தானி மெட்டி கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் முகம் பொலிவு பெறும்.

  7. இரவு வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் அரைத்து முகத்தில் பூசினால் எண்ணெய் வடிதல் மற்றும் சரும அழுக்குகள் நீங்கும்.

  8. வெந்தயத்தை ஊறவைத்த நீரில் காட்டன் துணியால் (Cotton Cloth) நனைத்து முகத்தில் தடவினால் நொடியில் முகம் பளபளப்பாகும்.

  9. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து அதனுடன் பால் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ முகம் மென்மை அடையும்.

  10. எலுமிச்சையை போலவே உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை அரைத்து அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால் முகம் பொலிவோடு மின்னும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com