உதடு வறட்சியைத் தடுக்க சில எளிய டிப்ஸ்! 

dry lips
dry lips
Published on

உதடு வறட்சி பிரச்சனை என்பது சுற்றுச்சூழல், உணவு, பழக்க வழக்கங்கள், மருந்துகள் மற்றும் உடல்நிலைகள் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். வறண்ட உதடுகளில் வெடிப்பு, ரத்தக்கசிவு, வீக்கம் போன்ற பிரச்சனைகள் உண்டாகி வலியையும், அசௌகரியத்தையும் தரும். இந்தப் பிரச்சனையை சரி செய்ய பல எளிய வழிகள் உள்ளன. இப்பதிவில் அவை என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம். 

உதடு வறட்சிக்கான காரணங்கள்: 

குளிர் காற்று, வெயில் மற்றும் குறைந்த ஈரப்பதம் உள்ள சூழல் உதடுகளை வறண்டு போகச் செய்யும். போதுமான தண்ணீர் குடிக்காதது, உப்பு மற்றும் காரமான உணவுகளை அதிகமாக உண்பது, வாய் வரட்சியை ஏற்படுத்தும் சில உணவுகளை உண்பது போன்றவை உதடு வறட்சியை அதிகரிக்கும். 

சில மருந்துகள் வாய் வரட்சியை பக்க விளைவாக ஏற்படுத்தும். இதில் ரத்த அழுத்த மருந்துகள், மனச்சோர்வு எதிர்ப்பு மருந்துகள், அலர்ஜி எதிர்ப்பு மருந்துகள் போன்றவை அடங்கும். 

அலர்ஜி, சளி, மூச்சுக் குழாய் அழற்சி, நீர் இழப்பு மற்றும் வைட்டமின் குறைபாடு போன்ற ஆரோக்கிய நிலைகள் உதடு வறட்சியை ஏற்படுத்தும். 

உதடு வறட்சியைத் தடுக்கும் வழிகள்: 

  • உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருந்தாலே உதடு வறட்சி ஏற்படாமல் இருக்கும். எனவே, தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

  • இயற்கை எண்ணெய்கள், மெழுகுகள் போன்ற லிப் பாம்களை தினமும் பலமுறை பயன்படுத்துங்கள். உப்பு மற்றும் காரமான உணவுகளை குறைத்து உண்ணுங்கள். 

  • வாய் வறட்சியை ஏற்படுத்தும் உணவுகளான காபி, தேநீர், ஆல்கஹால் போன்ற பானங்களை அதிகம் பருகாதீர்கள். 

  • உதடுகளை ஈரப்பதமாக வைத்திருக்க அவ்வப்போது அவற்றை நாவால் நக்குவதும், உதடு வறட்சியை அதிகரிக்கும். 

  • உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை உடனடியாக நிறுத்துங்கள். தினமும் இரண்டு முறை பல் துலக்கி, நாக்கை சுத்தம் செய்து, வாய் சுகாதாரத்தை பராமரிக்கவும். 

  • முடிந்தவரை வறண்ட காற்றில் இருந்து விலகியே இருங்கள். இது உங்களது உதடுகளை விரைவாக வறண்டு போகச் செய்யும். நீங்கள் வாய் வறட்சியை ஏற்படுத்தும் மருந்துகளை உட்கொண்டால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது. 

இதையும் படியுங்கள்:
தொப்பையை குறைக்கும் 5 இயற்கை ஆரோக்கிய பானங்கள்!
dry lips

இயற்கை தீர்வுகள்: 

உதடு வறட்சியை சரி செய்ய பல இயற்கை வைத்தியங்கள் உள்ளன. உதட்டில் தேங்காய் எண்ணெய் தடவுவதால் உங்கள் உதடுகள் ஈரப்பதமாகி, மென்மையாகும். ஆலிவ் எண்ணெய் உதடுகளுக்கு ஊட்டமளித்து வறட்சியைத் தடுக்கும்.

கற்றாழை ஜெல் உதடுகளுக்கு குளிர்ச்சியைத் தந்து வரட்சியை போக்க உதவுகிறது. ஷியா வெண்ணை உதடுகளுக்கு ஈரப்பதத்தைத் தந்து பாதுகாக்கும். உதடுகளுக்கு விட்டமின் ஈ எண்ணெய் பயன்படுத்தினாலும் மென்மையாக இருக்கும். 

மேற்கூறிய வழிகளைப் பின்பற்றி உதடு வறட்சி பிரச்சனைகளில் இருந்து நீங்கள் எளிதாக விடுபட முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com