மாதவிடாய் கால முகப்பருக்களில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்!

acne
Tips to get rid of period acne!
Published on

மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்வில் நடக்கும் ஒரு இயல்பான உடலியல் மாற்றம். ஆனால், இந்த காலகட்டத்தில் பல பெண்கள் முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுவதுண்டு. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள்தான் இதற்கு முக்கிய காரணம். முகப்பருக்கள் தோன்றும்போது தன்னம்பிக்கை குறைந்து சமூக வாழ்க்கையில் பல பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க நேரிடலாம். இந்தப் பதிவில் மாதவிடாய் கால முகப்பருக்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தடுக்கும் வழிகள் பற்றி விரிவாகக் காண்போம். 

மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரான் என்ற ஹார்மோன்களின் அளவு மாறுபடும். இந்த மாற்றங்கள் சருமத்தில் எண்ணெய் சுரப்பிகளைத் தூண்டி முகப்பருக்களை ஏற்படுத்தும்.‌ மேலும், ஆண்ட்ரோஜன் என்ற ஆண் ஹார்மோன் பெண்களின் உடலிலும் குறைந்த அளவில் இருக்கும். மாதவிடாய் காலத்தில் இந்த ஹார்மோனின் அளவு அதிகரிப்பது முகப்பருக்களை உண்டாக்கும். 

மாதவிடாயின் போது எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக செயல்பட்டு, ‘செபம்’ என்ற எண்ணெய் பொருள் அதிகமாக சுரக்கும்போது சருமத்தின் துளைகள் அடைபட்டு முகப்பருக்கள் உண்டாகும்.‌ இந்த செபத்துடன் பாக்டீரியாக்கள் கலந்து சருமத்தின் துளைகளில் தொற்று ஏற்படுத்தி முகப்பருக்கள் அதிகமாக வர வழி வகுக்கும். 

மாதவிடாய் கால முகப்பருக்களைத் தடுக்கும் வழிகள்: 

  • மாதவிடாயின் போது எப்போதும் உங்கள் முகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இது சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெயை நீக்கி முகப்பருக்கள் வராமல் தடுக்கும். 

  • முகப்பருக்கள் உள்ளவர்கள் எண்ணெய் பசை இல்லாத மாய்ஸ்சரைஸர், சன்ஸ்கிரீன் மற்றும் மேக்கப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். 

  • வாரத்திற்கு ஒருமுறை முகத்தை எக்ஸ்போலியட் செய்து சருமத்தின் இறந்த செல்களை நீக்க வேண்டும். இது சருமத்துளைகள் அடைத்துக்கொள்வதைத் தடுக்கும். 

  • முகப்பருக்கள் மிகவும் கடுமையாக இருந்தால் சரும மருத்துவர் அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. 

  • இத்துடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கம், மன அழுத்தத்தை குறைத்தல் சரியான தூக்கம் போன்றவை, சருமத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதைத் தடுக்க உதவும். 

இதையும் படியுங்கள்:
மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!
acne

மாதவிடாய் கால முகப்பரு என்பது பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைதான் என்றாலும், முறையான சருமப் பராமரிப்பு வழிமுறைகளைப் பின்பற்றினால் அவற்றை கட்டுப்படுத்த முடியும். இதனால், முகப்பருக்கள் காரணமாக தன்னம்பிக்கை குறையாமல், ஆரோக்கியமான சருமத்தை என்றும் நீங்கள் பெறலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com