முகத்தில் கொழுப்பு இருந்தால் முகம் மட்டும் குண்டாக உப்பி இருப்பது போல தெரியும். அது முகத்தின் இயற்கையான அழகை கெடுத்துவிடும்.
உடலில் கொழுப்பு சேர்ந்தால் உடல் பருமனாகிவிடும். உடல் பருமன் ஏற்படுவது சகஜம்தான். ஆனால், அது ஆரோக்கியமற்றது என்பது நம் அனைவருக்குமே தெரியும். உடலில் உள்ள கொழுப்பை கரைக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். யோகா செய்ய வேண்டும். இதுபோல சில வழிகளைப் பின்பற்றினாலே உடல் கொழுப்பு கரைந்துவிடும். ஆனால் முகத்தில் உள்ள கொழுப்பை யாருமே கண்டுக்கொள்ள மாட்டார்கள். அது தான் முக அமைப்பே என்று சொல்லி எளிதாக விட்டுவிடுவார்கள். ஆனால், முகத்தின் கொழுப்பை அகற்றுவதும் அவசியம்.
அந்தவகையில், முகத்தின் கொழுப்பை கரைக்கும் சில வழிகளைப் பார்ப்போம்.
உணவுமுறை:
ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். பழங்கள், காய்கறிகள், புரதங்கள் மற்றும் தானியங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதிக சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது முக கொழுப்பையும் உடல் கொழுப்பையும் கரைத்துவிடும்.
தூக்கம் அவசியம்:
அதிக நேரம் தூங்கிவிட்டு பார்த்தாலோ? அல்லது குறைவான நேரம் தூங்கிவிட்டு பார்த்தாலோ? முகம் வீங்கி இருப்பதுபோல பார்த்திருப்பீர்கள். அது இயல்புதான். ஆனால், இவ்வாறே தினமும் தூங்கினால் முகத்தில் கொழுப்பு வந்துவிடும். சரியாக 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது அவசியம்.
உடற்பயிற்சி:
உடற்பயிற்சி செய்வதன்மூலம் உடல் கொழுப்போடு சேர்ந்து முகத்தின் கொழுப்பும் கரைந்துவிடும். பின் முகத்திற்கென சில பயிற்சிகள் உள்ளன. அவற்றை தினம் செய்வதால், முகத்தின் கொழுப்பு குறையும்.
நீரேற்றத்துடன் இருங்கள்:
ஒரு நாளில் அதிகளவு தண்ணீர் குடிப்பதால், நச்சுகள் வெளியேறும். உங்கள் முகத்தில் உள்ள கொழுப்பை அகற்ற ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
மது அருந்துதல் கூடாது:
பொதுவாக மது அதிகம் அருந்துபவர்களுக்கே முகத்தில் கொழுப்பு சேரும். ஏனெனில், ஆல்கஹாலில் கலோரிகள் அதிகமாக உள்ளது. இது உங்கள் முகம் உட்பட எடை அதிகரிப்புக்கு பங்களிக்கும். நீங்கள் மது அருந்துவதைக் கட்டுப்படுத்துவது ஒட்டுமொத்த உடல் கொழுப்பைக் குறைக்கவும், மெலிதான முகத்தை அடையவும் உதவும்.
இவற்றை பின்பற்றி வந்தால், முகத்தில் உள்ள கொழுப்புகளை நீக்கி முக அமைப்பை அழகாக கொண்டு வரலாம்.