ஆண்களே தொப்பை இருக்கா? இந்த மாதிரி ட்ரெஸ் பண்ணுங்க!

தொப்பை
தொப்பைIntel
Published on

வேலைக்கு, கல்லூரிக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தங்களது உடலமைப்பு ஏற்றவாறு என்ன உடை அணியலாம் என தினமும் யோசித்து கொண்டே தான் இருக்கிறார்கள். முதல் நாளே என்ன ட்ரெஸ் போடலாம் என ஒரு மணி நேரம் யோசிப்பவர்களும் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தொப்பையுள்ள ஆண்கள் அதை மறைப்பதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் பெல்ட்டை இருக்கமாக போடுகிறார்கள்.

பெண்களுக்கு ஷேப் வியர் வந்தது போன்று ஆண்களுக்கு எந்த ஒரு ஆடையும் வரவில்லை. இதனால் ஆண்கள் என்னடா போடலாம் என குழம்புகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு எந்த மாதிரி ட்ரெஸ் பண்ணினால் நன்றாக இருக்கும். எது உங்களுக்கு எடுப்பாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

கச்சிதமான அளவு:

தொப்பை இருந்தாலும், நீங்கள் அணியும் ஆடை பொருத்தமாக இருக்க, நீங்கள் சரியான அளவைத் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், ஆண்கள் இதில் இரண்டு விஷயங்களில் தரவு செய்கிறார்கள். தொப்பை இருக்கிறது, எனவே அதை மறைக்க பெரிய அளவிலான சட்டைகளை அணிகிறார்கள். கோல்டன் மீட் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். பெரிதாகவும் இல்லாமல், சிறியதாகவும் இல்லாமல், உங்களுக்கு பொருந்தும், நீங்கள் சௌகரியமாக உணர்வும், உங்களை நேர்த்தியாக நல்ல வடிவத்தில் காட்டும், தொப்பையை மறைக்கும் அளவில் ஆடைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

பொருத்தமான ஃபிட்:

நீங்கள் வாங்கும் ஆடையின் அளவு சரியாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அதன் ஃபிட்டிங்கும் முக்கியம். தொப்பை இருப்பவர்களுக்கு டைட்டான ஆடைகள் நிச்சயமாக உதவாது.

பேன்ட் தேர்வு:

தொப்பை தானே, ஷர்ட் மற்றும் அல்லது டி ஷர்ட் மட்டும் சரியாக பார்த்து ஷாப்பிங் செய்தால் போதும், பேன்ட் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று சிலர் நினைக்கலாம். இது மிகவும் தவறானது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பேன்ட்டின் பிட்டிங், ஸ்டைல், கட்டிங் என்று எல்லாமே உங்களுடைய தோற்றத்தை ஒல்லியாகவும், நேர்த்தியாகவும் அல்லது குண்டாகவும் காட்டுவதில் முக்கியமான பங்கை வகிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com