

பன்னீர் ரோஜா இதழ்களுடன் சமஅளவு வேப்பிலை சேர்த்து, அரைத்து சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி 1/4 மணி நேரங்கழித்து முகம் கழுவினால் கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்கி சருமத்தை பளபளாக்கும்.
ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களை விழுதாக அரைத்து, அதனுடன் ஒரு டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர் கலந்து பசை போல ஆக்கி முகம்,கழுத்திலும் பூசி 1/4 மணி நேரம் ஊறவிட்டு பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட கருமை சரியாகும்.
சிறிது ரோஜா இதழ்களை பால் விட்டு விழுதாக அரைத்து உதடுகள் மீது பூசி பத்து நிமிடம் கழித்து கழுவினால் உதடுகள் பளபளப்பாகும்.
கைப்பிடி செம்பருத்தி இதழ்டன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அரைத்து முகத்திலும், கழுத்திலும் பூசி அரைமணி நேரம் ஊறவிட்டு பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கோடை காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை தடுத்து முகத்துக்கு மினு மினுப்பைத்தரும்.
சிறிது சாமந்தி பூ இதழ்களை எடுத்து சில துளிகள் பால் கலந்து விழுதாக அரைத்து இந்த கலவையை முகத்தில், கழுத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால்கோடை வெயிலால் கறுத்துப்போகும் சருமத்தை இயல்பான நிறத்துக்கு மாற்றும். சருமநோய்கள் வராமலும் தடுக்கும்.
தாமரை இதழ்களை சிறிது பால் விட்டு விழுதாக அரைத்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவவும்.
இது முகத்துக்கு நல்ல நிறத்தையும் மென்மையையும் கொடுக்கும். கோடை காலத்தில் இதைவாரம் இரண்டு முறை இதை செய்யுங்கள்.
கைப்பிடி அளவு மகிழம்பூவை ஊறவைத்து அரைத்து இந்த கலவையை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால் கோடைகால சருமப் பிரச்னைகளை தடுக்கும். வேர்க்குரு, வேனல்கட்டி போன்றவைகளை வர விடாது.
சூரியகாந்திப்பூ இதழ்களை எடுத்து எலுமிச்சை ஜூஸ், சர்க்கரை அளவாக கலந்து விழுதாக அரைத்து முகத்தில் பூசி விரலால் மசாஜ் செய்து கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் கோடையில் ஏற்படும் வியர்வை, முகத்தில் இருக்கும் அழுக்கு இறந்து செல்களை அகற்றி முகத்துக்கு இயற்கையான புது அழகை தரும்.
கோடையில் ஏற்படும் சரும பாதுகாப்புக்கு பூக்கள் தரும் புது விதமான அழகு.