குழந்தைகளுக்கான கோடைக்கால சருமப் பாதுகாப்புக் குறிப்புகள்!

Summer Skin Care Tips for Kids
Summer Skin Care Tips for Kids

கோடைகால சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்திலிருந்து எப்படி பெரியவர்களாகிய நாம் நமது சருமத்தைப் பாதுகாக்க முயற்சிகள் எடுக்கிறோமோ, அதேபோல குழந்தைகளின் சருமத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் அவர்களின் மென்மையான சருமத்தை எளிதில் பாதித்துவிடும். எனவே நமது சருமத்தை விட குழந்தைகளின் சருமத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். இப்பதிவில், கோடை காலத்தில் குழந்தைகளின் சருமத்தை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பதற்கான சில குறிப்புகளைப் பார்க்கலாம். 

சன் ஸ்கிரீன் பயன்படுத்தவும்: தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சுக்கு எதிராக சன் ஸ்கிரீன் ஒரு முக்கியமான பாதுகாப்பாகும். குழந்தைகளுக்கு SPF அளவு 30க்கு கீழ் இருக்கும்படியான சன் ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். குறிப்பாக குழந்தைகளுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சன் ஸ்கிரீன்களும் உள்ளன. அதை முகம், காதுகள், கழுத்து, கைகள் மற்றும் கால்கள் உட்பட வெயிலில் வெளிப்படும் எல்லா பகுதிகளிலும் தாராளமாகப் பயன்படுத்துங்கள். குறைந்தது 3 மணி நேரத்திற்கு ஒருமுறை சன் ஸ்கிரீனை குழந்தைகளுக்கு தடவி விடுங்கள். 

சூரிய ஒளியில் அனுப்பாதீர்கள்: சூரிய ஒளி அதிகமாக இருக்கும் நேரங்களில் குழந்தைகள் வெளியே இருப்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக காலை 10:00 மணி முதல் மாலை 4 மணி வரை, அவர்களை வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம். அப்படியே வெளியே சென்றாலும் முடிந்தவரை நிழல் பகுதியில் வைத்து அவர்களை கவனித்துக் கொள்ளவும். இது அதிக வெப்பத்தால் ஏற்படும் தாக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க உதவும். 

நீரேற்றம் முக்கியம்: ஆரோக்கியமான சருமத்தைப் பராமரிக்க சரியான நீரற்றம் முக்கியமானது. குறிப்பாக கோடை காலங்களில் அதிக நீரிழிப்பு ஏற்படும் என்பதால், நாள் முழுவதும் குழந்தைகளுக்கு அதிக திரவம் சார்ந்த உணவுகளைக் கொடுங்கள். போதுமான நீரேற்றம் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவி, சூரிய ஒளியால் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலைத் தடுக்க உதவும். 

கண் பாதுகாப்பு: குழந்தைகளின் கண்கள், புற உதாக் கதிர்வீச்சுக்கு எளிதில் பாதிப்படையும். எனவே உங்கள் குழந்தைகள் வெளியே சென்றால் முடிந்தவரை அவர்களது கண்களைப் பாதுகாக்கவும். வெளியே செல்லும்போது குடை மற்றும் சன் கிளாஸ் பயன்படுத்துவதால் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து அவர்களின் கண்களைப் பாதுகாக்கலாம். 

இதையும் படியுங்கள்:
கோடை வெப்பம் என்னென்ன செய்யும் தெரியுமா? ஜாக்கிரதை மக்களே!
Summer Skin Care Tips for Kids

அதிக வெப்பம் குழந்தைகளுக்கு தோல் அசௌகரியம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தலாம். எனவே குழந்தைகளை வெயில் காலங்களில் நன்கு காற்றோட்டம் நிறைந்த இடத்தில் வைத்து பராமரிக்கவும். இலகுவாக இருக்கும் காற்று உள்ளே போகக்கூடிய உடைகளை அணிவியுங்கள். அது அவர்களின் சருமத்திற்கு வெப்பத்தால் ஏற்படும் தாக்கத்தைத் தடுக்க உதவும். மேலும் சருமத்தில் ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com