டீனேஜ் அழகு - பளிச்சென்று மாற உதவும் பெட்ரோலியம் ஜெல்லி!

Petroleum jelly
Petroleum jelly
Published on

பெட்ரோலியம் ஜெல்லி இருந்தால் போதும்..! நீங்களும் அழகாக மாறலாம்..!

அழகாகவும், அரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புவோம். நாம் சாப்பிடும் உணவுகளை ஆரோக்கியமாக சாப்பிட்டு வந்தாலே நம்முடைய முகமும், உடலும் அழகாக இருக்கும். இதையும் தாண்டி நாம் சில அழகு சாதனப்பொருட்களை கொண்டு, மேலும் நம்மை மெருகேற்றி வருகிறோம். பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் தங்களை அழகுப்படுத்திக்கொள்ள ஆசைப்படுவதுண்டு. ஆனால் அதற்கு வாங்கும் பொருட்களின் எண்ணிக்கை குறைவு. மற்றப்படி அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும்.

அந்தவகையில் நாம் அனைவரும் சாதாரணமாக பயன்படுத்தும் வாஸ்லைன் பொருளை பல விதங்களில் நாம் பயன்படுத்தலாம். வாஸ்லைன் வைத்து பல விதங்களில் அழகாக நம்மை எப்படி பராமரித்துக்கொள்வதென்று இப்பதிவில் பார்க்கலாம்.

வாஸ்லைன்:

பெட்ரோலியம் ஜெல்லி எனப்படும் இந்த வாஸ்லைன் (Vaseline) , எண்ணெய் போன்ற தன்மை கொண்ட ஈரப்பதமான ஜெல்லி. இது சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்வதற்கு பயன்படுகிறது. அழகு சாதனப்பொருட்களிலும் இந்த வாஸ்லைன் பயன்படுத்தப்படுகிறது. வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் கொடுப்பதற்கு வாஸ்லைன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எவ்வாறு பயன்படுத்தலாம்:

  • வாஸ்லைனுடன் சிறிதளவு காபி பவுடர் சேர்த்து நன்றாக கலந்து, உதட்டில் ஸ்க்ரப் செய்தால் உதட்டில் உள்ள கருமை நீங்கி உதடு பளிச்சென்று மாறும். மேலும் வாஸ்லைன் மற்றும் சர்க்கரை கலந்து உதட்டில் ஸ்க்ரப் செய்தால் கருமை நீங்கிவிடும்.

  • அடுத்ததாக மூட்டுகளில் உள்ள கருமையை நீக்க, வாஸ்லைன் சிறிதளவு எடுத்து அதனை கருமை உள்ள இடங்களில் அப்ளை செய்து, ஒரு தக்காளி பழத்தை இரண்டாக வெட்டி அதில் ஒரு பகுதியை எடுத்து நன்றாக தேய்த்து வந்தால் கருமை நாளடைவில் நீங்கிவிடும்.

  • மேலும் ஒரு சிலருக்கு தலை முடி வறண்டு, கூந்தலின் அடியில் வெடித்து காணப்படும். அதனை தடுப்பதற்கு வாஸ்லைன் சிறிதளவு கூந்தலின் அடியில் தடவினால் கூந்தல் மிருதுவாக இருக்கும். ஆனால் இதனை தொடர்ந்து உபயோகிக்க வேண்டாம். வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
கூந்தல் வாசனையாக இருக்க செய்ய வேண்டிய விஷயங்கள்! 
Petroleum jelly
  • உதட்டில் லிப்ஸ்டிக் போட்ட பிறகு, வாஸ்லைனை அதன் மேல் தடவினால் பளபளப்பாக லிப் பாம் போட்ட உணர்வு கிடைக்கும். 

  • மேலும் கண்களில் காஜல், மை போன்றவற்றை பயன்படுத்தியிருப்போம். ஆனால் அதனை கலைப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். இனி வாஸ்லைன் பயன்படுத்தி கண்களில் போடப்பட்ட காஜல் போன்றவற்றை எளிமையாக நீக்கிவிடலாம். வாஸ்லைன் பயன்படுத்துவதால் கண் எரிச்சல் தடுக்கப்படுகிறது.

  • நம்மில் பலருக்கும் விரல் நகத்தை சுற்றி விரலின் தோல் உரிந்து எரிச்சல் ஏற்படும். இரசாயன பொருட்களை நாம் கைகளால் அதிக நேரம் பயன்படுத்துவதால் தோல் உரிந்து எரிச்சல் ஏற்படும். வாஸ்லைனை விரலின் ஓரங்களில் தடவி வந்தால் எரிச்சல் ஏற்படாது.

  • பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு வலி உள்ளவர்கள், இரவு உறங்க செல்லும்முன் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் வலி இல்லாமல், பாதம் ஈரப்பதத்துடன் இருக்கும். இதனால் பாதங்களில் வெடிப்பு ஏற்படாது. 

  • சிலர் தலைக்கு ஹேர் டை அடிப்பார்கள். இதனால் அவர்களின் நெற்றியில் அல்லது முகத்தில் அந்த ஹேர் டையின் கருமை படிந்து நாளடைவில் சரும பிரச்சனையை ஏற்படுத்தும். ஆனால்  வாஸ்லைனை முகத்தில் தடவி அந்த கருமையை எளிதாக நீக்கிவிடலாம். 

  • மேலும் விரலில் மோதிரம் போட்டுக்கொள்ளும் போதும், காதில் பெரிய அளவிலான காதணி போடும் போதும், வாஸ்லைன் பயன்படுத்தி போடுவதால் சுலபமாக வலியின்றி போட்டுக்கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com