சர்க்கரை என்பது ஒரு இனிப்பு பொருள். சருமத்திற்கு பல்வேறு வழிகளில் பலன் அளிக்கிறது. சர்க்கரையை உட்கொள்வதனால் தோலுக்கு பளபளப்பு கிடைக்காது. சர்க்கரையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தினால் முகம் உள்ளிட்ட உடலின் பல பகுதியின் தங்கியுள்ள மாசுக்கள் அகற்றப்படுகின்றன.
இயற்கையான முறையில் சர்க்கரையின் பயன்பாடு தோல் இழந்த மிருதன்மையை மீண்டும் பெறவும், சருமத்தை உலர வைக்கும் காரணிகளிடம் இருந்தும் நம்மை காக்கிறது. தோலில் இருந்து அதிகப்படியான நீர் சேர்த்து வெளியேறிவிடாமல் பார்த்துக்கொள்ளும். தோல் செல்களுக்கு மிருதுத் தன்மையையும் சாக்கரைவழங்குகிறது.
சர்க்கரையில் அதிக அளவு கிளைக்காலிக் அமிலம் உள்ளது இந்த கிளைக்காலிக் அமிலத்தின் பயன்பாடு இறந்த செல்கள் பெருமளவில் தங்கியுள்ள தோலில் உள்ள வெளிப்புற படலத்தை சருமத்தின் படலத்தை விட்டுப் பிரித்து, செல்களை கவனமாக உரித்து எடுப்பதால் தோல் மிருதுவாக மாறும். அதிக பொலிவுடனும் எப்போதும் திகழும்.
வீட்டிலேயே மிருதுவான பளபளக்கும் சருமத்தைப் பெற இயற்கையான வழிமுறைகளை காணலாம்.
சர்க்கரையை கடைக்கு பொய் தான் வாங்க வேண்டும் என்றெல்லாம் இல்லை, வீட்டில் இருந்தே வாங்கலாம்.
சர்க்கரை + எலுமிச்சை ஸ்கிரப்
சர்க்கரையுடன் எலுமிச்சை சாறு கலந்து ஸ்க்ரப்பாக்கி முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற பயன் படுவதோடு மட்டும் அல்லாது சருமத்தில் உள்ள பழுப்பு வடுக்களையும் நீக்கும்.
செய்முறை:
இரண்டு டீஸ்பூன் சர்க்கரையுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை பழத்தின் சாறை சேர்த்து சர்க்கரை கரைந்த உடன் இந்த பேஸ்ட்டை முகத்தில் சமமாக தடவி சர்க்கரை முகத்தில் முழுவதுமாக பரவும் வகையில் சீராக தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை நீரால் கழுவினால் முகம் பளபளப்பாகும்.
கிரீன் டீ + சர்க்கரை ஸ்சிரப்
கிரீன் டீ சிறந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுவதால் இதில் உள்ள ஆன்டி இன் பிளமேட்டரி மற்றும் ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளதால் இது முகத்தில் ஏற்படும் இடர்பாடுகளை களைய உதவுகிறது.
செய்முறை:
ஒரு தேக்கரண்டி கிரீன் டீ இலைகளுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அதனுடன் சில துளி ஆலிவ் எண்ணெய் சேர்த்து திக்காக கலக்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து விரலைக் கொண்டு முகத்தில் படிந்துள்ள படலத்தை மெல்ல உரித்து எடுத்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக நீக்கி முகம் பொலிவாக இருக்க உதவுகிறது.
ஓட்ஸ் + சர்க்கரை ஸ்கிரப்
எண்ணெய் சருமம் உள்ளவர்கள் ஓட்ஸ் உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணையை நீக்குவதோடு வீக்கங்களையும் குறைக்க உதவுகிறது.
செய்முறை:
ஒரு டீஸ்பூன் ஓட்சுடன் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து சில துளிகள் ஆலிவ் ஆயில் அல்லது தேனை கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் சீராக தடவி பத்து நிமிடங்கள் கழிந்த பின் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாகும்.
மஞ்சள் பொடி + சர்க்கரை ஸ்கிரப்
மஞ்சள் பொடிக்கு முகப்பருக்களை அழிக்கும் ஆற்றல் உள்ளது. அது மட்டுமல்லாது கண்களின் அருகே ஏற்படும் கருவளையங்களை அகற்றுகிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சருமம் பொலிவுடன் இருக்க உதவுகிறது.
செய்முறை:
ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடியுடன் சிறிது சர்க்கரை சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் போல ஆக்கி அந்த பேஸ்ட்டை முகத்தில் சீராக தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் அழகாகவும், ஆரோக்கியமாகவும், பொலிவுடன்.
ஆலிவ் எண்ணெய் + சர்க்கரை ஸ்க்ரப்
ஆலிவ் எண்ணெய் சருமத்தில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றி தோலில் உள்ள பிளாக் மரு மற்றும் ஒயிட் மரு நீக்கி சருமம் பொலிவுடன் இருக்க உதவுகிறது.
செய்முறை:
ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பேஸ்ட் ஆக்கி கலக்கி இதை முகத்தில் சீராக தடவி சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள பரு, மரு எண்ணெய்ப்பசை நீங்கி சருமம் பொலிவாக இருக்கும்.
சர்க்கரையை கடைக்கு பொய் தான் வாங்க வேண்டும் என்றெல்லாம் இல்லை, வீட்டில் இருந்தே வாங்கலாம்.