கோடைகாலத்தில் ஏன் Sunscreen பயன்படுத்த வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

Sunscreen
Sunscreen

என்னதான் சூரிய ஒளி நமக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஒன்றாக இருந்தாலும், கோடை காலத்தில் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதால், நம் சருமத்தில் பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள் நம் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒன்றாகும். இதைத் தடுப்பதற்காகவே கோடை காலங்களில் வெளியே செல்லும்போது முகத்தில் சன் ஸ்கிரீன் போடுவது அவசியம். இப்பதிவில் கோடைகாலத்தில் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதன் முக்கியத்துவங்களைப் பற்றி பார்க்கலாம். 

இதையும் படியுங்கள்:
சூரிய வெப்பத்திலிருந்து சருமத்தை பாதுகாக்க Rose Water இருந்தால் போதுமே!
Sunscreen
  1. UV கதிர்களுக்கு எதிரான பாதுகாப்பு: சூரியன் நமது சருமத்தை சேதப்படுத்தும் இரண்டு வகையான புற ஊதாக் கதிர்களை வெளியிடுகிறது: UVA மற்றும் UVB. இதில் UVA கதிர்கள் தோலில் ஆழமாக ஊடுருவி, விரைவில் வயதான தோற்றத்தையும், சுருக்கங்கள் மற்றும் சன் ஸ்போர்ட்ஸ் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. மறுபுறம் UVB கதிர்கள் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே நாம் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது இத்தகைய கதிர்கள் நம்மை பாதிப்பதிலிருந்து பாதுகாக்கிறது. 

  2. சன் பர்ன் தடுப்பு: பொதுவாகவே கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது இயல்பு. எனவே போதிய பாதுகாப்பு இல்லாமல் நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருந்தால், சூரிய ஒளியால் ஏற்படும் காயமான சன் பர்ன் ஏற்படலாம். சன் ஸ்கிரீனைப் பயன்படுத்தினால் நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருந்தாலும், சருமம் காயமடையாமல் இருக்கும். 

  3. விரைவில் வயதாவதைத் தாமதப்படுத்தும்: அதிகப்படியான சூரிய ஒளி முதுமையான தோற்றத்திற்கு வழிவகுக்கும். இது முகத்தில் சுருக்கங்கள், கோடுகள் மற்றும் முகப்பருக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். சூரியக் கதிர்கள் சரும பாதிப்புகளுக்கு பொறுப்பாகும் என்பதால், சரும பராமரிப்பில் சன் ஸ்கிரீனை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இதன் மூலமாக தீங்கு விளைவிக்கும் கதிர்களுக்கு எதிராக ஒரு கவச அமைப்பு உருவாகி, முன்கூட்டியே வயதான தோற்றத்தைத் தடுக்க உதவுகிறது. 

  4. தோல் புற்றுநோயின் அபாயம் குறையும்: தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக இருப்பது புற ஊதாக் கதிர் தான். எனவே வழக்கமாக சன் ஸ்கிரீனைப் பயன்படுத்தி வந்தால், இத்தகைய கதிர்களால் ஏற்படும் அபாயம் கணிசமாகக் குறைகிறது. எனவே கோடைகாலத்தில் வெளியே செல்லும்போது வெயில் அதிகம் படும் இடங்களான முகம், காதுகள், கழுத்து, கைகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் சன் ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். 

  5. ஆண்டு முழுவதும் பாதுகாப்பு: கோடைகாலங்களில் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அனைவராலும் பரிந்துரைக்கப்பட்டாலும், புற ஊதாக் கதிர்களின் தாக்கம் ஆண்டு முழுவதும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். எனவே பருவங்களைப் பொருட்படுத்தாமல், தினசரி தோல் பராமரிப்பு வழக்கத்தில் சன் ஸ்கிரீனை சேர்த்துக்கொள்வதால், ஆண்டு முழுவதும் சூரியக் கதிர்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளுக்கு எதிராக பாதுகாப்புடன் இருக்க முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com