கிளிசரின் மணமற்ற, நிறமற்ற மற்றும் நச்சுத் தன்மையற்ற இயற்கையான ஈரப்பத மூட்டியாகும். இவை சருமத்தின் மேல் அடுக்குகளில் படிந்து இருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கு உதவும்.
கிளிசரின் டோனர்:
மூன்று பங்கு ரோஸ் வாட்டர், ஒரு பங்கு தண்ணீர், ஒரு பங்கு கிளிசரின் மூன்றையும் கலந்து கிளிசரின் டோனரை உருவாக்கலாம்.
சருமம் மற்றும் முடிக்கு சிறந்த நன்மைகள் தரக்கூடியது கிளசரின். சருமத்துக்கு சிறந்த மாய்சரைசராக செயல்படும்.
எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் மாய்சரைஸ்வர் உபயோகிக்க தயங்குவார்கள். ஆனால் கிளிசரினை தாராளமாக மாய்ஸரைசராக பயன்படுத்தலாம்.
பன்னீர் மற்றும் கிளிசரின் இரண்டையும் சமஅளவு எடுத்து நன்கு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து காட்டன் துணியால் முகத்தை துடைக்க சருமம் மாசு மருவின்றி பளிச்சென்று மின்னும்.
ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கிளிசரின், கற்றாழை ஜெல் மற்றும் தண்ணீர் கலந்து வைத்துக்கொண்டு தேவைப்படும் சமயம் முகத்தில் ஸ்பிரே செய்ய புத்துணர்வு பெறலாம்.
சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாத்து மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். சரும பராமரிப்புக்கான சோப், க்ரீம்களில் கிளிசரின் முக்கியமான மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது.
இவை சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுவதால் முகப்பரு வருவதும் தடுக்கப்படும்.
தேனுடன் கிளிசரின் கலந்து அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிட சருமம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
கிளிசரினை சிறிது தண்ணீருடன் கலந்து கண்டிஷனராக கூந்தலுக்கும் பயன்படுத்தலாம். கூந்தல் பராமரிப்புக்கு கிளிசரினில் ஈரப்பதமூட்டும் பண்புகள் இருப்பதால் பொடுகு வருவதும் குறையும்.
தலைமுடிக்கு வண்ணம் பூசுபவர்கள் மட்டும் சிகை அலங்கார நிபுணர்களிடம் ஆலோசனை பெற்ற பின்பு கிளிசரினை தலைக்கு பயன்படுத்துவது நல்லது.
வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் முகத்தில் கிளிசரின் தடவி வர கரும்புள்ளிகள், பருக்கள் மறையும்.
சருமத்தில் ஏற்படும் எரிச்சல், வறட்சி போன்ற பிரச்னைகளுக்கு கிளிசரின் தடவுவது சிறந்த தீர்வாக அமையும்.
முகச்சுருக்கங்களால் ஏற்படும் வயதான தோற்றத்தை குறைக்க கிளிசரினை முகம், கழுத்துப்பகுதி மற்றும் கைகளில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
கோடை காலம், குளிர் காலம் ஆகிய இரண்டு காலங்களிலுமே கிளசரினை பயன்படுத்தலாம். இவை சருமத்தில் ஏற்படும் வெடிப்பு, வறட்சி, எரிச்சல் போன்றவற்றை குணமாக்கி சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளும்.