பொடுகு பிரச்சனைக்கு தீர்வு காபி மாஸ்க்!

Coffee mask...
Coffee mask...www.healthshots.com

ழகான தலைமுடியை பராமரிக்க இயற்கையான வழிகளை நீங்கள் தேடுகிறீர்களானால், உங்களுக்காக சில காபி மாஸ்க்குகள் உள்ளன. உங்கள் முடி மற்றும் உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு உதவும் காபி மாஸ்க்குகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

காபியில் முடியை கழுவுதல்:
காபி மாஸ்க் தயாரிக்க கால் கப் அரைத்த காபி பவுடர் மற்றும் போதுமான வெந்நீர் தேவை. காபியை தயாரிக்க காபி தூளுடன் சூடான நீரை ஊற்றி ஒன்றாக கலக்க வேண்டும். பின்னர், அதை ஒரு வசதியான வெப்ப நிலையில் குளிர்விக்க விடுங்கள். இந்த காபி நீரை உங்கள் உச்சந்தலையில் ஊற்றி மெதுவாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். வேர்கள் முதல் நுனி வரை நன்றாக தடவ வேண்டும். சுமார் 10-15 நிமிடங்கள் கழித்து முடியை தண்ணீரில் அலசுங்கள்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?
காபியில் உள்ள காஃபின் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. இது முடி வளர்ச்சி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், உங்கள் முடியை புதியதாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும்.

பொடுகு பிரச்னைக்கு காபி:
காபியை தயாரித்து அதை குளிர்விக்க விட வேண்டும். நீங்கள் வழக்கம் போல் உங்கள் தலைமுடியை ஷாம்பு போட்டு அலச வேண்டும். பின்னர், இறுதியில் காபி தண்ணீரை தலையில் ஊற்றி அலச வேண்டும். அது உங்கள் உச்சந்தலை முழுவதும் பரவி இருப்பதை உறுதி செய்யவும். இந்த நடவடிக்கைக்குப் பிறகு உங்கள் தலைமுடியைக் கழுவ வேண்டிய அவசியமில்லை.

காபி ஹேர் மாஸ்க்
காபி ஹேர் மாஸ்க் www.healthshots.com


இது எவ்வாறு வேலை செய்கிறது?
காபியில் உள்ள இயற்கையான அமிலத்தன்மை உங்கள் உச்சந்தலையின் pH அளவை சமப்படுத்தவும் பொடுகு பிரச்சனைகளை எதிர்த்து போராடவும் உதவும். கூடுதலாக, இது உங்கள் தலைமுடிக்கு ஒரு பளபளப்பான பிரகாசத்தை சேர்க்கிறது மற்றும் பளபளப்பை கொடுக்கிறது.

காபி ஹேர் மாஸ்க் தயாரிக்க தேவையான பொருட்கள்:
2 டேபிள் ஸ்பூன் காபி பவுடர்,
1 டேபிள் ஸ்பூன் தேன்
1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை வேர்கள் முதல் நுனி வரை உங்கள் தலைமுடியில் தடவ வேண்டும். பின்னர், ஒரு ஷவர் கேப் போட்டு 20-30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். ஷாம்பூவைக் கொண்டு உங்கள் தலைமுடியை நன்றாக அலசிய பின், பட்டுப்போன்ற கூந்தலை பெறுவீர்கள்.

இதையும் படியுங்கள்:
உடல் எடை கூடிக்கிட்டே போகுதா? அப்போ கற்றாழை ஜூஸ் குடிச்சா போதுமே! 
Coffee mask...

காபி உங்கள் உச்சந்தலையில் அதிசயங்களைச் செய்யும் அதே வேளையில், உங்களுக்கு சென்சிடிவ்வான ஸ்கால்ப் இருந்தால் அல்லது காபிக்கு ஒவ்வாமை இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள். எந்தவொரு பாதகமான எதிர்விளைவுகளையும் நீங்கள் அனுபவிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த எப்போதும் பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com