
நெற்றிக்கு பொட்டு இட்டுக்கொள்வதே பழங்கால பெண்கள் ஒரு மங்கலச் செயலாகக் கருதினர். பொட்டு பெண்களின் சௌபாக்கியத்தின் சின்னமாக இன்றும் கருதப்படுகிறது.
நெற்றியில் பொட்டு இட்டுக் கொள்வது பெண்களின் முக அழகை மேம்படுத்தி காண்பிக்கும் தகுந்த முறையில் பொட்டு வைத்துக் கொள்வதன் மூலம் சற்று வயதான பெண்களும் இளமை தோற்றத்துடன் திகழமுடியும்.
பெண்களும் தங்கள் உடல் நிறத்திற்கு ஏற்றவகையில் தக்க நிறங்களில் பளிச்சு என்று தெரியுமாறு நெற்றியில் பொட்டிட்டு கொண்டால் அந்த ஒன்றே பெண்களுக்கு தனி அழகை சேர்க்கும்.
உடல் நிறத்திற்கும் உடை வண்ணத்திற்கும் ஏற்ப வண்ண குங்குமம் அல்லது சாந்தினை பயன்படுத்தி திலகமிட்டு கொள்வது பெண்களுக்கு எழில் சேர்க்கும்.
நெற்றியில் அழகான உருவத்தோற்றங்களில் பொட்டு வைத்துக் கொள்வதற்கு என்றே பல வகையான டிசைன்களில் இப்பொழுது பொட்டுக்கள் கிடைக்கின்றன. நெற்றியில் பொட்டிட்டு கொள்வது என்று பெண்கள் கொஞ்ச நேரத்தை செலவிட சோம்பல் படக்கூடாது.
நெற்றியில் குங்கும பொட்டிடுவதற்கு முன்னால் கொஞ்சம் வெள்ளை வாசலினை தடவி அதன் மீது குங்கும பொட்டிட்டால் பளிச்சென்று தோன்றும் நீண்ட நேரம் அழியாமல் அப்பொழுதுதான் இட்ட மாதிரி காட்சி அளிக்கும்.
நெற்றியில் ஏதாவது வண்ண சாந்து அல்லது குங்குமத்தால் பொட்டிட்ட பிறகு அதனைச் சுற்றி வேறு வண்ணத்தில் மெல்லிய வளைய கோடு இட்டுக் கொண்டால் அழகாக இருக்கும் இவ்வாறு செய்ய சற்று சிரமம் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கும் சிரமத்தை கருதி பார்க்கக் கூடாது.
சிவப்பு நிறமுடைய பெண்கள் கருநிறச் சாந்தினால் பொட்டிட்டு கொண்டால் அழகாக இருக்கும் கருநிறச் சாந்து பொட்டு எந்த நிறத்தில் சேலை அணிந்தாலும் அதற்கு பொருத்தமாக இருக்கும் சாந்து இட்டுக் கொள்ளாதவர்கள் ஸ்டிக்கர் பொட்டு என்றாலும் இதே போன்ற காம்பினேஷனில் இட்டுக் கொள்வதால் நெற்றியில் அழகுக்கு அழகு சேர்க்கும்.
முகம் மேலும் கீழுமாக நீளவாக்கில் உள்ள பெண்கள் நெற்றியில் வட்டமாக பொட்டிடாமல் நெற்றியில் அகலவாக்கில் ஒன்றரை அங்குல நீளத்திற்கு வீபூதி பூச்சு போல தடிப்பாக பொட்டிட்டு கொண்டால் நன்றாக இருக்கும்.
பரந்த முகம் உள்ளவர்கள் நெற்றியில் பொட்டுட்டு கொள்வதுடன் கன்னத்தில் மெல்லிய பொட்டிட்டுக் கொண்டால் அழகாக இருக்கும் இதனை திருஷ்டி பொட்டு என்பார்கள் ஆனால் குறுகலான முக அமைப்பு உள்ள பெண்கள் திருஷ்டி போட்டு வைத்துக் கொண்டால் அழகாக இருக்காது.
கோடை நாட்களில் சாந்து பொட்டு வைத்துக்கொண்டால் வெயிலில் நடமாட நேர்ந்தால் இளகி வழிய நேரிடலாம் ஆகவே வெப்ப நாட்களில் குங்குமம் பொட்டுஇட்டு கொள்வது பலவிதத்திலும் நல்லதாகும் இல்லை என்றால் ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்ளலாம். ஸ்டிக்கர் போட்டு வயதான பிறகு வைத்துக்கொள்ள சுமங்கலி பெண்கள் விரும்புவது கிடையாது குங்குமம் அல்லது சாந்தினால்தான் பொட்டிட்டு கொள்வார்கள் அப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பொட்டு இட்டுக்கொள்வது மிகவும் நல்லது.
ஸ்டிக்கர் பொட்டுகள் பல கலர்களில் பல டிசைன்களில் கிடைத்தாலும் நம் முக அமைப்பிற்கு ஏற்ற டிசைனையும் பெரும்பாலும் அரக்கு சிவப்பு வண்ண கலர்களையே தேர்ந்தெடுத்து நெற்றியில் வைத்துக்கொள்வது நெற்றிக்கு அழகுக்கு அழகு சேர்ப்பதோடு சேலைக்கு ஏற்ற மாதிரியும் சுடிதாருக்கு ஏற்ற மாதிரியும் நம் தோற்றத்தை பளிச்சென்று காட்டும்.
ஸ்டிக்கர் போட்டு சிலருக்கு நெற்றியில் அரிப்பை ஏற்படுத்துகிறது அதனால் முதலில் சிறிதளவு கண்மையை வைத்துக்கொண்டு அதன் மேல் ஸ்டிக்கர் பொட்டை வைத்துக்கொண்டால் அரிப்பு ஏற்படாது.
குங்குமப்பொட்டு இட்டுக்கொள்ளும் பொழுது நல்ல தரமான மஞ்சள் குங்குமமாக தேர்வு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் குங்குமம் நாம் நெற்றியிலிருந்து நீக்கிய பிறகும் நம் நெற்றியில் சிவப்பாக படிந்து கருந்தழும்பை ஏற்படுத்திவிடும்.