முகம் பளிச்சென மின்னிட மாம்பழ ஃபேஸ் மாஸ்க் இருக்கே..!

mango face mask
mango face maskImage credit - theazb.com

ந்த கோடைக்காலத்தில் மாம்பழம் பல‌ ரகங்களில் வந்து நம் நாவிற்கு சுவையூட்டும். நாவிற்கு மட்டுமன்றி உடலுக்கும் குறிப்பாக முக சரும‌பொலிவுக்கு   பலவிதங்களில் நன்மையை கொடுக்கிறது.

மாம்பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது சருமத்தை பொலிவாக்கி போஷாக்கு தருகிறது. வெயிலினால் ஏற்படும் கருமை, மற்றும் சுருக்கத்தை போக்கி மேனியை பொலிவுடன் வைக்க உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் சி  கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. அத்துடன் ஃப்ரீ ரேடிகல்ஸ் லிருந்து  சருமத்தை பாதுகாக்கிறது.

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் இருப்பதால் முகப்பரு வருவதை குறைப்பதுடன் முகத்தை வறட்சி இன்றி பாதுகாக்கிறது. பாக்டீரியாவை எதிர்த்து போராடி முகப்பரு, மங்கி வருவதை குறைப்பதுடன் பளபளப்பையும் தருகிறது.

மாம்பழ ஃபேஸ் மாஸ்க் கரும்புள்ளிகளை குறைத்து சருமத்தை நிறமாக்கும். மாம்பழத்தில் உள்ள வைட்டமின் கே கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. இதிலுள்ள வைட்டமின் ஏ சத்து சருமத்தை ஈரப்பதத்தோடு வைத்திருந்து வறட்சியை  தடுக்கிறது.

மாம்பழ பேக் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் ஆக்கி கறைகளைப் போக்குவதோடு, சருமம் முதிர்ச்சியடைவதை  தடுக்கிறது. வயதான தோற்றத்தை மாற்றி இளமையோடு இருக்க உதவுகிறது.

மாம்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், வைட்டமின் பி6, வைட்டமின் கே, பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்கள் சரும துளைகளில் படியும் அழுக்கையும், எண்ணெய் பசையையும் நீக்கும். சுருக்கங்கள், கோடுகளை போக்கி சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் ஆக்குகிறது.

மாம்பழக் கூழுடன் முல்தானி மெட்டி சேர்த்து பேக் ஆக போட்டு ஊறியதும் கழுவ‌ சருமம் பளிச்சென்று இருக்கும்.

2டீஸ்பூன் மாம்பழக் கூழ், 2டீஸ்பூன் கற்றாழை ஜெல், 1டீஸ்பூன் தயிர், 1டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவ வெயிலால் கருத்த  இடம்  நிறம்  மாறி பளிச்சிடும்.

2டீஸ்பூன் மாம்பழக் கூழுடன் 2டீஸ்பூன் பால் பவுடர், 1டீஸ்பூன் எலுமிச்சைசாறு அல்லது பன்னீர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவ முகச்சுருக்கம் நீங்கி சருமம் பளிச்சென்று இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com