கண் சோர்வைப் போக்க இந்த 5 விஷயங்கள் செய்தால் போதும்!

Tired eyes
Tired eyes
Published on

உடல் சோர்வடையும்போது கண்களும் சோர்வாக காணப்படும். திடீரென்று வெளியே செல்லும் சூழ்நிலை வரும்போது பார்ப்பதற்கு நன்றாகவே இருக்காது. அந்தவகையில் கண்சோர்வைப் போக்க சில வழிகளைப் பார்ப்போம்.

அதிக நேரம் போன் பார்ப்பதால், இரவு முழுவதும் விழித்திருப்பதால், அல்லது வெகு நேரம் வேலைப் பார்த்துவிட்டு அதிக நேரம் தூங்குவதால், உடலும் கண்களும் சோர்வாகும். கண் சோர்வு ஏற்பட்டால், கருப்பு வளையம் தோன்றும், கண்ணுக்கு கீழ் உள்ள சருமம் சுருங்கி இருக்கும். நீங்கள் சோர்வாக இருப்பதை அது காட்டிக்கொடுத்துவிடும். அந்தவகையில் அந்த பாதிப்புகளை போக்க ஐந்து வழிகளைப் பார்ப்போம்.

கண்களுக்கு ஓய்வு:

அதிக நேரம் கணினி அல்லது போன் ஸ்கிரீன் பார்த்தால், கண்கள் சோர்வாகிவிடும். அந்த சமயங்களில் இடைவெளி கொடுப்பது அவசியம். அதாவது,  20 நிமிடங்கள் தொடர்ந்து ஸ்கிரீனை பார்த்துக் கொண்டிருந்தால் 20 விநாடிகள் ஸ்கிரீனில் இருந்து கண்ணை விலக்குங்கள். ஸ்கிரீனை விட்டு 20 அடி தள்ளி இருங்கள். இது கண் சோர்விலிருந்து வெளிவர உதவும்.

மசாஜ் செய்யுங்கள்:

தினமும் 10 நிமிடங்களாவது கண்களுக்கு நல்ல மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்வதால், கண்களில் ஏற்படும் அழுத்தங்கள், சோர்வு ஆகியவை குறைந்து கண்கள் பளிச்சென்று தெரியும். புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

அதிகமாக தண்ணீர் குடியுங்கள்:

தாகமடிக்கும்போது மட்டும் தண்ணீர் குடிக்க வேண்டாம். குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஹெல்த்தின் அறிவுரைப்படி ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அது கண்களில் உள்ள நீர் சத்தையும் சமநிலையில் வைக்கும. சோர்வு ஏற்படுவதை தவிர்க்கும்.

இதையும் படியுங்கள்:
PCOS/PCOD உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்! 
Tired eyes

ஒத்தடம்:

ஐஸ் கட்டிகளை நேரடியாக கண்களின் மேல் வைத்தோ அல்லது ஒரு ஐஸ்பேக்கில் நிரப்பியோ கண்ணிமைகளின் மேல் வைத்து ஒத்தடம் கொடுத்து வர, சில நிமிடங்களிலேயே கண்கள் நன்கு புத்துணர்ச்சி அடையும்.

இயற்கையான காற்று:

எப்போதும் ஃபேன், ஏசியின் காற்றிலேயே இருப்பதைத் தவிர்த்து விட்டு அவ்வப்போது இயற்கையான காற்று உள்ள இடத்தில் இருங்கள். ஃப்ரஷ்ஷான காற்று மனதுக்கு மட்டுமல்ல, கண்களுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

இந்த ஐந்து வழிகளைப் பின்பற்றி வாருங்கள். கண் சோர்வை முற்றிலுமாக தவிர்த்துவிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com