இளமை வேண்டுமா? அப்ப இத கவனிக்க வேண்டுமே!

Young beauty
Young beauty
Published on

இளமையாக இருக்க வேண்டும் என்று அனைவருமே விரும்புவது இயல்பான ஒன்று. தனக்கு வயதான தோற்றம் தெரிந்து விட கூடாதென்று பார்த்து பார்த்து அழகு சாதனப் பொருட்களை தேர்ந்தெடுப்பது வழக்கமாக மாறிவிட்டது. அவ்வாறு தேர்ந்தெடுக்கும் போதும், பயன்படுத்தும் போதும் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்துக் கொள்ள வேண்டும். 

சிலர் பார்ப்பதற்கு வயதானவர் போன்று தோற்றமளிக்கலாம். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் மேக்கப் லுக் அல்லது அவர்கள் பயன்படுத்தும் அலங்காரங்களில் தவறு இருக்கலாம். எனவே இந்த பதிவு வயதான தோற்றத்தை தவிர்ப்பதற்கு கவனிக்க வேண்டிய சில விஷயங்களை எடுத்துரைக்கிறது.

இளமை தோற்றத்திற்கு கவனிக்க வேண்டியவை:

சிகை அலங்காரம்:

முதலில் தலையில் தொடங்கலாம். தலை முடியை பராமரிப்பது மட்டுமல்ல, தலை முடியை கட்டுவதிலும் பெண்களுக்கு சற்று சிரமம்தான். ஒவ்வொரு ஆடைக்கு தகுந்தாற் போல் சிகை அலங்காரம் செய்வது வழக்கம்தான் என்றாலும், அவ்வாறு செய்யும் சிகை அலங்காரத்தை தேர்ந்தெடுப்பதிலும் நமது அழகு அடங்கியுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, போனிடெயில் போட வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால், தாழ்ந்த போனிடெயிலுக்குப் பதிலாக உயரமான போனிடெயிலில் உங்கள் முடியை கட்டவும். ஏனெனில், தாழ்ந்த போனிடெயில் உங்கள் முகத்தை வயதானவர் போல காண்பிக்கலாம். ஆனால், உயரமான போனிடெயிலில் இளமையாக தெரிவீர்கள். உயரமான போனிடெயிலில் பல சிகை அலங்காரங்கள் செய்ய முடியும் அதை தேர்வு செய்வது உங்களை இளமையாக காண்பிக்க உதவியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கேசத்தின் அழகை அதிகரிக்கும் தேங்காய்ப் பால்....
Young beauty

முக ஒப்பனை:

முகத்தில் செய்யும் ஒப்பனைகளில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொட்டு மிக முக்கியம். ஏனெனில், உங்கள் முகத்திற்கு ஏதுவான பொட்டை நீங்கள் தேர்ந்தெடுத்தால்தான் இன்னும் அழகாக தெரிவீர்கள்.  அதைபோல் நீங்கள் கரைசலான பொட்டை நெற்றியில் இடும் போது சரியான இடத்தில் கவனமாக இட வேண்டும். அதிலும் பாரம்பரியமான உடைகளை அணியும்போது நெற்றியில் வைக்கும் பொட்டு தனி அழகை காண்பிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

ஆடை தேர்வு:

கமீஸ், குர்தா போன்ற ஆடைகளை தேர்வு செய்தால், துப்பட்டாவை ஒரு பக்கமாக போடலாம். இரண்டு பக்கம் துப்பட்டா போடும்போது வயதான தோற்றத்தை பெறுவது போன்று இருக்கும். அதைபோல், செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு ஆடையை தெரிந்தெடுங்கள். எடுத்துக்காட்டாக,  அலுவலகத்திற்கு சென்றால், மூடிய கழுத்து குர்த்தாவை தேர்ந்தெடுக்கலாம். இது உங்களை இளமையாக காட்டுவதோடு, தொழில் முறையாகவும் தோற்றமளிக்கும்.

நமது உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை பார்த்து பார்த்து வாங்கும் பொருட்களின் தேர்வு சரியாக இருந்தால்தான் பயன்படுத்தும் போது வெளித்தோற்றம் அழகாக தெரியும். அதிலும் இளமையாக தெரிய வேண்டும் என்றால், இது போன்ற விஷயங்களில் உங்கள் தேர்வு சரியானதாக அமைய வேண்டும்.

ஆனால் ஒன்று இவ்வாறு தேர்ந்தெடுக்கும் எல்லா வற்றிலும் அழகாக தெரிவதோடு, உங்கள் வசதியும் முக்கியம் என்பதை மனதில் போட்டுக் கொள்ளுங்கள்.......

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com