ஹை ஹீல்ஸ் செருப்பு வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

high heel chappal
high heel chappalImage credit - pixabay.com

குதிகால் உயர்ந்த காலணி அணிவதில் எல்லா வயது பெண்களுக்குமே ஆர்வம் அதிகம். ஹை ஹீல்ஸ் செருப்புகளை தொடர்ந்து உபயோகித்தால் முதுகு வலி, குதிகால் வலி வருமென தெரிந்தாலும் ஆசைப்பட்டு வாங்கவே செய்கின்றனர்.

குதிகால் உயர செருப்பை வாங்கும்போது சிலவற்றை கவனத்தில் கொண்டால் ஆரோக்ய பிரச்னைகளை தவிர்க்கலாம். ஹை ஹீல்ஸ் வாங்கும்போது கால் அளவை சரியாக தெரிந்து கொண்டு வாங்க வேண்டும். ஆன்லைனில் வாங்கும்போது அளவுகள் மாறும்.

பிரபலமான பிராண்ட் க்காகவும், செருப்பின் அழகில் மயங்கியும் வாங்கக் கூடாது. பொருத்தமில்லாத செருப்பை அணிந்து கொண்டு நடப்பதால் குதிகால் வலி, முதுகு வலி என பிரச்னைகளை கொடுத்து விடும்.

பகலில் வேலை செய்து விட்டு மாலையில் செருப்பு வாங்க போகும்போது காலின் அளவு சற்று மாறுபடும். மாலையில் வாங்குவதற்கு பதில் காலையில் வாங்க சரியாக இருக்கும்.

அதிக உயரமாக தெரிய வேண்டும் என்பதற்காக அளவுக்கு மீறிய ஆறு அங்குல ஹை ஹீல்ஸை தேர்வு செய்தால் நடை மாறுவதோடு தடுக்கி விடும் அபாயமும் உள்ளது. நடைக்கு எளிதாக, பாதங்களுக்கு பாதுகாப்பாக உள்ள செருப்புகளை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.

இரண்டு அங்குல குதிகால் உயர்ந்த செருப்புகள் ஆபத்தில்லாதவை. தொடர்ந்து பயன்படுத்தினாலும் தொல்லைக் கொடுக்காது. குதிகால் உள்ளிருக்கும் சோல் (soul) ரப்பரால் ஆனதா என பார்த்து வாங்க வேண்டும். ரப்பர் சோல்தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க ஏதுவாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
விடா முயற்சி நிச்சயம் வெற்றியைத் தரும்!
high heel chappal

தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் கால்களுக்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரக்கூடியவை.

ஹை ஹீல்ஸ் முன்புறம் மேற்பகுதி முழுவதும் மூடியிராமல் அங்கங்கே காற்று புகும்படி இருக்க வேண்டும். அதிக நேரம் உபயோகிக்காமல் குறைந்த நேரத்திற்கு பயன்படுத்த பெரிதாக பிரச்னைகள் வராது. குதிகால் செருப்பு காலில் நன்றாக பொருந்தும் வகையில் வடிவமைக்க பட்டிருக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com