இந்த தீபாவளிக்கு புதுசா வந்துள்ள ஆடை ரகங்கள்!

இந்த தீபாவளிக்கு புதுசா  வந்துள்ள ஆடை ரகங்கள்!

ந்த தீபாவளிக்கு புதுசா வந்துள்ள ஆடை ரகங்கள்.

தீபாவளி தமிழ்நாட்டின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். தீபாவளி என்று சொன்னவுடனே குழந்தைகள் முதல் பெரியவர்களை அனைவரும் எண்ணற்ற எதிர்பார்ப்புகள் இருக்கும். ஏன் நடுத்தர குடும்பங்கள் தீபாவளியை கொண்டாடுவதற்காக ஆண்டு முழுவதும் சேமிப்பர். அந்த அளவிற்கு தீபாவளி தமிழர்களின் உணவோடு கலந்த பண்டிகையாக மாறிவிட்டது.

இந்த நிலையில் நடப்பு ஆண்டு தீபாவளி நவம்பர் மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக தமிழகம் தயாராகி வருகிறது. உணவகங்கள் தொடங்கி பேக்கரிகள் வரை புதிய உணவு பண்டங்கள், கார வகைகள், இனிப்பு வகைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்படைந்து வருகிறது. மற்றொருபுறம் புத்தாடையில் புதிய ரகங்கள் அறிமுகம் செய்யப் பட்டிருக்கின்றன.

தீபாவளியின் மிக முக்கிய பங்கு வகிப்பது புத்தாடைகள். இந்த நிலையில் நடப்பு ஆண்டு லிச்சி சாரீஸ், ஹோம் பிரே சாரீஸ், துவார சாரீஸ், அலியா சாரீஸ், டு டவுன் கிளாத் சாரீஸ் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. குழந்தைகளுக்கு மிடி, கவுன், சுடிதார் லெக்கின், ஜீன்ஸ், கார்டன் டாப், பாப் லெக்கின்ஸ், மசக்கலி, நியூ மாடல் பட்டியாலா, போன்ற மாடல்கள் பெண் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

ஆண்களுக்கு கார்டன், ஜீன்ஸ், கார்கோ வேரைட்டிகள் பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன. குழந்தைகளுக்கு பாபா சூட் வகைகள், கோர்ட் வெரைட்டி, லியோ சார்ட், குர்தா, கார்கோ மாடல் வெரைட்டி ஆகியவை புது ரகங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளன.

புள்ளங்கோவின் விருப்பத்திற்கு ஏற்ப பளிச்சென்று அடிக்கும் பல வண்ணக் கலர்களில் ஷர்ட், பேண்ட், டி-ஷர்ட், லோயர், சாட் ஆகியவையும் விற்பனைக்கு வந்துள்ளன. வேட்டி சேட்டைகளை பிரதானமாக விற்பனை செய்யும் நிறுவனங்கள், தங்கள் விற்பனையை அதிகரிக்க காம்போ ஆஃபரை வழங்கி உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com