உங்க தலைமுடி அரிப்புக்கு இதுதான் காரணம்! 2 நிமிஷத்துல பொடுகை விரட்ட சயின்ஸ் சொல்லும் ரகசியம்!

Dandruff problem and solutions
Dandruff problem
Published on

டேன்ட்ரப் (Dandruff) இந்த ஒரு சருமப்பிரச்னையை நம் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் சந்தித்திருப்போம். இதனால் அரிப்பு, முடி கொட்டுதல், முடி உடைதல் போன்ற பிரச்னைகளை உண்டாகும். இதில் இருந்து வரும் Flakes நம் சருமத்தில் படும்போது அது நம் சருமத்தில் இருக்கம் Poresஐ அடைத்து Acne போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். இந்த Dandruff பிரச்னை ஏன் வருகிறது, எதை பயன்படுத்தி இதை சரிசெய்வது போன்றவற்றை விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

பொடுகு வருவதற்கு முக்கியமான காரணம் ஒரு Yeast. அதன் பெயர் Malassezia furfur. இயற்கையாகவே இது மனிதர்களின் சருமத்தில் இருக்கும். இது நம் சருமத்தை பாதித்து Dandruff, seborrheic dermatitis போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். இதை சரிசெய்ய Anti fungal agent ஆன Ketoconazole 2% ஷாம்பு பயன்படுத்த வேண்டும். இதற்கு டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் தேவையில்லை.

நிறைய ஹேர் கேர் அல்லது Anti dandruff ஷாம்புகளில் Ketoconazole 1% ஐஅல்லது 2% சதவீதம் இருக்கும். இதில் இருக்கும் பிரச்னை என்னவென்றால், ஷாம்புவை தொடர்ந்து பயன்படுத்தும் போது Ketoconazole ஆல் இந்த Fungus அழிக்க முடியமல் போகலாம். இதை தடுக்க இரண்டு Components சேர்ந்திருக்கும் ஷாம்புவை பயன்படுத்துவது நல்லது. இன்னொரு சிறந்த Antifungal agent என்று பார்த்தால், Zinc Pyrithione. நாம் பயன்படுத்தும் Head and shoulder, dove இதிலெல்லாம் Zinc pyrithione இருக்கிறது.

Ketoconazole மற்றும் Zinc pyrithione கலந்த ஷாம்புவை  3 முதல் 4 வாரம் பயன்படுத்த வேண்டும். இந்த ஷாம்புவை பயன்படுத்தும் போது வேறு எந்த ஷாம்புகளையும் பயன்படுத்த வேண்டாம். Dandruff உடன் சேர்ந்து வரும் இன்னொரு பிரச்னை Flaking. தலையை தட்டினாலே டிரஸ் முழுவதும் கொட்டும்.

இதை சரிசெய்ய Salicylic acid இருப்பது போல ஒரு ஷாம்புவை பயன்படுத்தலாம். இதை Ketoconazole ஷாம்புவுடன் சேர்த்து பயன்படுத்தலாம். இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும். இதை பயன்படுத்தும் போது முடி வறண்டு காணப்படும்.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தம் போக்கும் நறுமண சிகிச்சை: அரோமா தெரபி!
Dandruff problem and solutions

இதற்கு சருமத்தில் தடவ வைத்திருக்கும் Hyaluronic acid கிரீமை தலைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். Dandruff உள்ளவர்கள் தலையில் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் வைக்கக்கூடாது. எண்ணெய் தடவுவதை ஒரு நான்கு வாரத்திற்கு நிறுத்தி விடுங்கள். இதையெல்லாம் செய்த பிறகும் பொடுகுத் தொல்லை இருக்கிறது, தலையை அரிக்கிறது என்றால் நல்ல டெர்மடாலஜிஸ்டை பார்ப்பது சிறந்தது. ஏனெனில் இதை விட சக்தி வாய்ந்த Components இருக்கிறது. அதற்கு டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் இருக்க வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com