திரிஷாவின் தினசரி வழக்கம் இது தானாம், பின்பற்றி நீங்களும் இளமையாகுங்கள்!

திரிஷாவின் தினசரி வழக்கம் இது தானாம், பின்பற்றி நீங்களும் இளமையாகுங்கள்!

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டிலும், இந்த ஆண்டிலும் வெளியான பொன்னியின் செல்வன் 1& 2 திரைப்படங்கள் இன்றளவிலும் ரசிகர்களின் தீவிர விமர்சனக் கணைகளுக்கு உள்ளாகி வருகின்றன. ஆனால் விமர்சனமே இன்றி சகலரும் ஏற்றுக் கொண்டு ஆராதித்த ஒரு விஷயம் அத்திரைப்படங்களில் உண்டு எனில் அது திரிஷாவின் அழகும், இளமையான தோற்றமும் மட்டுமே! ஒரு நடிகை அழகாகவும், இளமையாகவும் தன்னைக் காட்டிக் கொள்வதில் அப்படி என்ன ஆச்சர்யமிருக்க முடியும் என்று தோன்றலாம். ஆனால், உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதுடன் முகத்தையும் ஃப்ரெஷ்ஷாக பராமரிப்பதென்றால் அதிலும் திரிஷா தற்போது 40 வயதை எட்டி விட்டார் என்கிறார்கள். இந்த 40 வயதில் திரிஷா ஈராயிரக் குழவிகளை கவர்ந்திழுத்து தன் அழகை ஆராதிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் எனில் அது பாராட்ட வேண்டிய விஷயம் தான். இல்லையா?!

சரி அப்படி என்ன செய்து திரிஷா தன் அழகை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார் என்று பார்த்தால், அது கடைபிடிப்பதற்கு அப்படி ஒன்றும் கடினமான வழிமுறைகளாக இல்லை என்பதை நீங்களே திரிஷாவின் வழக்கமான டயட் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்.

திரிஷாவின் தினசரி வழக்கங்கள்…

1. திரிஷாவின் உணவுப்பழக்கத்தில் காலையில் சத்தான பழங்கள் மட்டுமே, பொரித்த உணவுகளுக்கு இடமில்லை.

2. கூடுமான வரையில் வெளி உணவுகளைத் தவிர்த்து விடுகிறார்.

3. பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவை மட்டுமே உண்பார். திரிஷாவுக்கு ரொட்டி, ஆம்லெட் மற்றும் தயிர் பிடிக்கும்.

4. தினசரி யோகா, உடற்பயிற்சி, தியானம் செய்யத் தவற மாட்டார்.

5. ஃப்ரெஷ்ஷாகப் பிழியப்பட்ட பழச்சாறுகள். அதேபோல, வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழச்சாறுகளை திரிஷா மிகவும் விரும்புவார்.

6. திரிஷாவின் தினசரி டயட்டில் சர்க்கரை உணவுகள் மற்றும் மைதா உணவுகளுக்கு இடமில்லை.

7. உடலை நீரேற்றமாக வைத்திருக்க போதுமான அளவில் தண்ணீர் குடிப்பார்.

8. அத்துடன் கையில் எப்போதும் பாதாம், பிஸ்தா, முந்திரி, போன்ற சில வகை பருப்புகள் இருக்கும். பசிக்கும் போது அவற்றைச் சிறிது சிறிதாக காலி செய்வது திரிஷாவின் வழக்கம்.

திரிஷா போல 40 லும் 20 போலத் தோன்ற இதைப் பின்பற்றினால் போதும் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com