மஞ்சள் பூசினால் பெண்கள் கூடுதல் அழகைப் பெறுவார்களாமே!

Beauty Tips
Beauty Tips
Published on

பெண்களின் அழகை வர்ணிக்கும் போது அவர்களின் முகம் தான் பிரதான இடம் பிடிக்கும். பெண்கள் எப்போதுமே முகத்தை மிகவும் அழகாக வைத்திருக்க வேண்டும் என மெனக்கெடுவார்கள். சிலர் அழகுநிலையங்களுக்கு செல்வார்கள். ஒரு சிலரோ வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருள்களைப் பயன்படுத்தி தங்களின் அழகை மெருக்கூட்டுவார்கள். 

இயற்கையான முறையில் முகத்தை அழகாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், எவ்வித அச்சமும் இன்றி கற்றாழையை தேர்வு செய்யலாம். கற்றாழை ஜெல்லை எடுத்து முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடவும். பின்னர் குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறையக்கூடும். முகப்பரு வடுக்களை குறைக்கவும் உதவும்.

பெண்கள் முக பொலிவிற்காக தேன் தேர்வு செய்யலாம். இதில் உள்ள இயற்கை மாய்ஸ்சரைசர் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தைத் தெளிவாக வைத்திருக்க உதவுகிறது. நீங்கள் தினமும் தேனை முகத்தில் அப்ளை செய்யும் போது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி முகத்தை பிரகாசமாக்குகிறது.

பப்பாளி பெண்களின் முகத்தை பளபளபாக்குவதற்கு உதவும் அழகு சாதனப் பொருள்களில் முக்கியமானது. இதில் உள்ள பப்பைன் என்ற வேதிப்பொருள் முகத்தில் மேல் அடுக்கில் உள்ள இறந்த செல்களை மெதுவாக நீக்குகிறது. மேலும் முகத்தைப் பொலிவாக்குகிறது. பழுத்த பப்பாளி அல்லது அதன் தோலைக் கொண்டு முகத்தில் ஸ்கிரப் செய்வது போன்று தேய்த்து அரை மணி நேரத்திற்கு அப்படிவே விட்டுவிடவும். பின்னர் குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவவும்.

மஞ்சள் பூசினாலே பெண்கள் கூடுதல் அழகைப் பெறுவார்கள். இதில் உள்ள குர்குமின் மற்றும் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முகத்தை பளபளப்புடன் வைத்திருக்க உதவுகிறது. காலையில் அல்லது தூங்குவதற்கு முன்னதாக முகத்தில் மஞ்சள் அப்ளை செய்யவும்.  30 நிமிடங்களுக்குப் பின்னர் முகத்தைக் கழுவும் போது முகம் பளபளப்பாக இருக்கும்.

தயிரில் லாக்டிக் அமிலம் இருப்பதால், பளபளப்பான சருமத்திற்கான சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றாக உள்ளது. தேன் கலந்து அல்லது தயிரை அப்படியே அப்ளை செய்யும் போது சருமத்தில் இருக்கும் லாக்டிக் அமிலம், மெல்லிய கோடுகளை குறைக்க உதவுகிறது. கரும்புள்ளிகளையும் அகற்றுகிறது.

வாழைப்பழத் தோல்கள் பெண்களின் சருமத்தின் நிறத்தை மாற்றுவதற்கும் கருவளையங்களை நீக்கவும் உதவுகிறது. எனவே வாழைப்பழத்தோலை உங்கள் தோலில் மெதுவாக தேய்க்கவும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை விட்டு பின்னர் தண்ணீரில் கழுவவும்.

ஒவ்வொரு நாளும் இரவில் பச்சைப் பாலை முகத்தில் தேய்க்கும் போது, சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

சிலருக்கு T-zone அதாவது நெற்றி, மூக்கு, தாடை T வடிவ அமைப்பில் மட்டும் எண்ணெய் அதிகம் சுரக்கும். எனவே அந்த பகுதியை சரியாக பராமரிக்காவிட்டால் சருமத் துகள்கள் இறந்த செல்கள், அழுக்குகளால் அடைபட்டு பருக்கள் தோன்றும். எனவே அந்த இடத்தை ஸ்கிரப் செய்து தினமும் இறந்த செல்களை நீக்க வேண்டும். இல்லையெனில் அடிக்கடி அதே இடத்தில் பருக்கள் தோன்றும்.

கன்னத்தில் ஆங்காங்கே தெரியும் கருமையான திட்டுக்களை எந்த பியூட்டி கிரீம்களாலும் மறைக்க முடியாது. அவற்றை நீக்குவதற்கான ஒரே வழி இதுதான்...

இதையும் படியுங்கள்:
முகம் ஒரு ஓவியம் என்றால், உதடுகள் அதன் இதயம்!
Beauty Tips

இதற்கு உங்களுக்குத் தேவையானது அரிசி மாவும், காஃபி பொடியும்தான். அதாவது ஒரு ஸ்பூன் காஃபி பொடி மற்றும் அரிசி மாவு இரண்டையும் நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். அதில் 3 ஸ்பூன் சுடு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்தில் கலந்து கொள்ளுங்கள். அதை திட்டுக்கள் உள்ள இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர, கருமை திட்டுக்கள் தானாக மறைவதைக் காண்பீர்கள்.

இதில் பயன்படுத்தும் அரிசி மாவு சருமத்தை வெளிர வைக்கும் தன்மைக் கொண்டது. இதனால் கரும்புள்ளிகள், திட்டுகள் அனைத்தும் மறைந்துவிடும். அதேபோல் காஃபி பொடி இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்திற்கு பொலிவு தரும்.

பெண்கள் பயன்படுத்தக்கூடிய சில அழகு சாதனப் பொருள்களில் அவர்களின் முகத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படலாம். இனி வரும் காலங்களில் இது போன்ற வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தி உங்களது சருமத்தை மேலும் அழகாக்குவதற்கு முயற்சி செய்ய மறந்து விடாதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com