தலையில் பேன் மற்றும் ஈறு இரு இருப்பது பெரும் பிரச்சனையாகும். இவை தலையில் உள்ள ரத்தத்தை உறிஞ்சி, தோல் அரிப்பு, தொற்றுப் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால், பெரும் அசௌகரியத்தை சந்திக்கும் நபர்கள், தூக்கமின்றி மன அழுத்தத்தை சந்திப்பர். ஆனால், இயற்கையான வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றி பேன், ஈறு தொல்லையிலிருந்து விடுபட முடியும்.
வீட்டு வைத்தியங்கள்:
வேப்பிலை ஒரு இயற்கையான பூச்சிக்கொல்லியாகும். வேப்பிலை இலைகளை அரைத்து தலையில் பூசினால் பேன் மற்றும் ஈறுகள் அழியும்.
வினிகரின் அமிலத்தன்மை பேன்களின் உயிர் வாழும் திறனை குறைக்கிறது. எனவே, வினிகரை தண்ணீரில் கலந்து தலையில் பூசினால், பேன் ஈறுகளை எளிதாக அகற்றலாம்.
உப்பு பேன்களின் உடலை உலர்த்தி கொல்லும் தன்மை கொண்டது. குப்பை தண்ணீரில் கலந்து தலையில் பூசி சிறிது நேரம் வைத்திருந்த பின்னர் தலைக்கு குளித்தால், பேன்கள் அனைத்தும் மடிந்துவிடும்.
பூண்டின் வாசனை பேன்களை விரட்டும் தன்மை கொண்டது. பூண்டை அரைத்து தலையில் பூசினால் பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
ஆலிவ் எண்ணெய் பேன்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தி கொல்லும். ஆலிவ் எண்ணெயை தலையில் பூசி சிறிது நேரம் ஊற வைத்த பின்னர் தலைக்கு குளிக்கவும்.
சீயக்காய் தலைமுடியை பலப்படுத்தி பேன்கள் மற்றும் ஈறுகளை எதிர்த்து போராட உதவும். எனவே, தலைக்கு குளிக்கும்போது சீயக்காய் தூலை தண்ணீரில் கலந்து, சிறிது நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும்.
மருத்துவ சிகிச்சைகள்: மெடிக்கல் கடைகளில் கிடைக்கும் பேன் கொல்லி மருந்துகள், பேன் மற்றும் ஈறுகளைக் கொல்ல உதவும். ஆனால், இந்த மருந்துகளை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது. பேன் சீப்பைப் பயன்படுத்தி தலையில் உள்ள பேன் மற்றும் ஈறுகளை அகற்றலாம். மேலும், வெப்ப சிகிச்சை சாதனத்தை பயன்படுத்தி பேன் மற்றும் ஈர்களை அடியோடு கொல்ல முடியும்.
பேன் மற்றும் ஈறுகள் ஏற்படாமல் இருக்க தலை முடியை தினமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தலைமுடிக்கு பயன்படுத்தும் பிரஷ், சீப்பு போன்றவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்ளாமல், நீங்கள் மட்டுமே பயன்படுத்துவது முக்கியம். அவ்வப்போது தலைமுடியை சரிபார்த்து, அதில் ஏதேனும் பேன் ஈறுகள் இருந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலையில் பேன் மற்றும் ஈறு ஏற்படுவது ஒரு சாதாரண பிரச்சினையாக இருந்தாலும், சரியான சிகிச்சை எடுக்காவிட்டால் பெரிய பிரச்சினையாக மாறும். மேலே குறிப்பிட்ட வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி அவற்றை நீங்கள் முற்றிலுமாக நீக்கலாம். அல்லது தகுந்த மருத்துவரை அணுகி அதற்கு ஏற்றவாறு சிகிச்சை பெறுவது நல்லது.