முக அழகை மேம்படுத்தி பளபளப்பான தோற்றத்தை உருவாக்குவதற்கு நமது புருவங்களை முறையாகப் பராமரிப்பது அவசியம். நீங்கள் இயற்கையாகவே அழகான புருவங்களை பெற்றிருந்தாலும், அதை சிறப்பாக பராமரித்து நல்ல தோற்றத்தை பெற சில தந்திரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
சவரக்கத்தி மற்றும் கத்தரிக்கோல்: உங்களது புருவங்களை சிறப்பாக பராமரிக்க பயன்படுத்த வசதியாக இருக்கும் சவரக்கத்தி மற்றும் கத்தரிக்கோலை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது. கையில் பிடிப்பதற்கு வசதியாக இருக்கும் சரியான பொருட்களை தேர்ந்தெடுக்கவும். புருவத்தை சரி செய்ய ஏன் கத்தரிக்கோல்? என நீங்கள் கேட்டால், பெரிதாக நீண்டு வளர்ந்திருக்கும் புருவ முடிவுகளை கத்திரிக்கோல் பயன்படுத்தி வெட்டலாம். குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது புருவத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
Eyebrow pencil: புருவங்களை வடிவமைப்பதற்கு ஐப்ரோ பென்சில் மிகவும் முக்கியமானது. இது குறைவாக முடிகள் இருக்கும் பகுதியில் உள்ள இடைவெளிகளை சரி செய்ய பயன்படுகிறது. எனவே ஐப்ரோ பென்சிலை தேர்வு செய்யும்போது எளிதில் கலையாத, நீண்ட நேரம் தாங்கக் கூடிய பென்சிலை தேர்ந்தெடுங்கள். இது தவிர புருவம் அடர்த்தியாக இருப்பவர்கள், ஐப்ரோ ஜெல் பயன்படுத்தி, அதை தட்டையாக சீப்பு வைத்து சீவினால் அழகாக இருக்கும். எனவே புருவ ஜெல் தேவைப்பட்டால் அதையும் சரியாகத் தேர்ந்தெடுக்கவும்.
சில அடிப்படைக் குறிப்புகள்:
உங்கள் புருவங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.
உங்கள் புருவங்களை அழகாக காட்டும் ஐப்ரோ பென்சிலை தேர்வு செய்யவும்.
புருவத்திற்கு ஏதேனும் டை பயன்படுத்துகிறீர்கள் என்றால், அது இயற்கையான தோற்றத்தைத் தரும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
கண் இமைகளுக்கு மஸ்காரா போடுவது போல, புருவங்களுக்கு புருவ ஜெல் பயன்படுத்தி, அது அடர்த்தியாக எழுந்து நிற்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
அடர்த்தியான புருவங்கள் வேண்டுமென்றால், வீட்டிலேயே இருக்கும் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், ஆலுவேரா ஜெல் ரோஸ்மேரி எண்ணெய் போன்றவற்றை புருவத்திற்கு பயன்படுத்தலாம். இவை புருவத்தில் முடி வளர்ச்சியைத் தூண்டி அடர்த்தியாக மாற உதவும். மேலும் வெங்காயச்சாறு தடவினாலும் புருவத்தில் முடி அடர்த்தியாக வளரும்.
உங்களது முக அம்சங்களை சிறப்பாக வெளிப்படுத்த புருவங்களை பராமரிப்பது அவசியம். மேலே குறிப்பிட்டுள்ள புருவ பராமரிப்பு குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம், இயற்கையான முறையில் அழகான புருவங்களை நீங்கள் அடையலாம்.