மழைக்காலத்தில் பார்லர் போகாமலேயே அழகாக ஜொலிக்க சில டிப்ஸ்!

Tips to shine beautifully in the rainy season.
Tips to shine beautifully in the rainy season.
Published on

மழைக்காலம் வந்துவிட்டாலே நம் சருமத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும். ஈரப்பதம் அதிகரிப்பதால், அதிக எண்ணெய் பசை இல்லாமல் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு பலரும் போராடுகின்றனர். இனி உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம். பார்லர் செல்லாமலேயே வீட்டிலேயே இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி உங்கள் சருமத்தை அழகாக ஜொலிக்க வைக்க சில எளிய டிப்ஸ் இதோ.

சருமத்தை சுத்தம் செய்தல்:

தினமும் இரண்டு முறை முகத்தை நன்கு கழுவி சுத்தப்படுத்துவது அவசியம். குளிர்ச்சியான நீரில் முகத்தைக் கழுவுங்கள் அல்லது வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். அதிக ரசாயனங்கள் நிறைந்த சோப்புகளைத் தவிர்த்து முகத்திற்கு ஏற்ற மிருதுவான கிளென்சரைப் பயன்படுத்துங்கள். வாரத்திற்கு இரண்டு முறை வீட்டிலேயே தயாரித்த ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துங்கள். கடலை மாவு, பால், தேன், எலுமிச்சை சாறு போன்ற பொருட்களைப் பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க் எளிதாகத் தயாரிக்கலாம். வாரத்திற்கு ஒருமுறை மென்மையான ஸ்க்ரப் பயன்படுத்தி சருமத்தின் இறந்த செல்களை நீக்குங்கள்.

சருமத்திற்கு ஈரப்பதமூட்டுதல்: மழைக்காலத்தில் ஏற்கனவே சருமம் ஈரப்பதமாக இருந்தாலும், அதற்கு கூடுதல் ஈரப்பதம் சேர்ப்பது நல்லது. முகத்தை நன்கு கழுவிய பின் தினமும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள். உங்கள் சருமத்திற்கு ஏற்ற சரியான மாய்ஸ்சரைசரைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும். கிளென்சரினை தண்ணீரில் கலந்து டோனர் போல பயன்படுத்துங்கள். இது சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தைத் தரும். அல்லது வெள்ளரிக்காய் துண்டுகளை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்தால் சருமம் புத்துணர்ச்சி பெற்று ஈரப்பதம் அதிகரிக்கும்.

சருமப் பாதுகாப்பு: மழைக்காலத்திலும் சூரிய ஒளி சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, நீங்கள் வீட்டில் இருந்தாலும் SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட SPF அளவுகொண்ட சன் ஸ்கிரீனை தினமும் தவறாமல் பயன்படுத்துங்கள். மழைநீரில் குளிப்பது நல்லது என்றாலும் நேரடியாக முகத்தில் மழை நீர் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மழைக்காலத்தில் அதிக மேக்கப் போடுவதைத் தவிர்த்து இயற்கையான தோற்றத்தை பராமரிக்கவும்.

இதையும் படியுங்கள்:
புத்தியையும் செயலையும் நிர்வகிக்கும் உணவு குறித்து பிதாமகர் பீஷ்மரின் விளக்கம்!
Tips to shine beautifully in the rainy season.

இத்துடன் ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றவும். தினசரி போதிய அளவு தண்ணீர் குடிக்கவும். பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்ற சத்தான உணவுகளை அதிகம் உண்ணுங்கள். தினசரி உடற்பயிற்சி செய்வது உங்கள் சருமத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து புத்துணர்ச்சி அளிக்கும். தினமும் குறைந்தது 7-8 மணி நேரம் கட்டாயம் தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இவற்றை நீங்கள் முறையாக பின்பற்றினாலே மழைக்காலத்திலும் உங்களது சருமம் பளபளப்பாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com