
கோடை வெயிலில் வெளியில் சென்று வந்தால் முகம் சோர்ந்து பொலிவிழந்து காணப்படும். இதற்கு பழங்களால் ஆன பேக் கொண்டு தீர்வு காணலாம். தக்காளி ஒரு துண்டு பப்பாளி ஒருதுண்டு, தர்பூசணி சிறிது, எலுமிச்சைசாறு சேர்த்து பேஸ்ட் போல குழைத்து இக்கலவையை முகத்துக்கு பேக் போட்டு சிறிது நேரம் கழித்து நீரில் கழுவினால் முகத்துக்கு புத்துணர்ச்சி அளித்து பளபளக்க செய்யும்.
வெளியில் சென்று வந்தால் சிலருக்கு முகத்தில் எரிச்சல் உண்டாகும். இதற்கு வெள்ளரிக்காயை அரைத்து முகம் முழுக்க பேக் போட்டு கழுவினால் இதனால் எரிச்சல் மறைந்து குளிர்ச்சியாக உணரலாம். வேர்க்குரு உண்டாவதையும் இது தடுக்கும்.
வேப்பிலை, மஞ்சள், பச்சை பயறு மாவு, கடலை மாவு, பால் ஏடு ஆகியவற்றை கலந்து அரைத்து முகத்துக்கு பேக் போட்டால், கோடையில் முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து புத்துணர்ச்சி ஏற்படும்.
செம்பருத்தி இலையை அரைத்து தயிர் சேர்த்து தலையில் தடவி ,அரை மணி நேரம் கழித்து குளித்தால் உடலுக்கு குளிர்ச்சியும் கூந்தலும் மிருதுவாகி பளபளக்கும்.
கோடை காலத்தில் அதிக அளவில் முகப்பரு உண்டாகும். எண்ணெய் வடியும் சருமம் உள்ளவர்களுக்கு புதினா இலை ஒரு கைப்பிடி, வேப்ப இலைகள் சிறிது, ஆரஞ்சு தோல், முல்தானி மெட்டி ஒரு டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து முகத்துக்கு பேஸ் பேக்போடவும். இது பரு உண்டாவதை தடுப்பதுடன் பருவினால் உண்டாகும் தழும்பையும் இது மறைய செய்யும்.
கோடையில் சிலருக்கு முகம் வறண்டு போகும். இவர்களுக்கு இயற்கையான சிகிச்சை. இரண்டு ஸ்பூன் தேனில் சிறிதளவு முல்தானி மெட்டி பவுடர் போட்டு நன்றாக குழைத்து முகத்திலும் கைகளிலும் பூசலாம். அரை மணிநேரம் கழித்து குளித்தால் வறண்ட சருமத்தை பொலிவாக்கும். முகம். மென்மையாகும்.
வெயிலில் சென்று வந்தவுடன் வாசலின் அல்லது வெது வெப்பான தேங்காய் பால் எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து பின்னர் வெது வெதுப்பான நீரில் முகம் கழுவினால் இது வறண்ட சருமத்தை மென்மையாக மாற்றும்.
தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் கலந்து அக்கலவையை ஃபேஸ் பேக் போல முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறவிட்டு பின் முகத்தை கழுவினால் வறண்ட சருமம் மினுமினுப்பாகும்.
கோடையில் தலைப்பகுதியில் வேர்வையால் அழுக்கு படியும். கூந்தல் முனைகள் உடைந்து பலம் இழந்துபோகும் வாய்ப்புள்ளது. தலையில் சூட்டை குறைக்க தேங்காய் எண்ணெய் ,அவகோடா எண்ணெய் /ஆலிவ் ஆயில் மூன்றையும் சம அளவில் எடுத்து தலையில் தொடங்கி முடியின் நுனிவரை தேய்த்தால், உடல் சூட்டை இது குறைக்கும். கூந்தலில் அழுக்கும், வியர்வையும் வராது.
கோடையில் ஏற்படும் அழகு பிரச்னைகளை சமாளிக்க காலை, மாலை இரண்டு வேளை குளிக்கலாம். கண்களுக்கு குளிர் கண்ணாடி கை உரை, தலைக்கு ஸ்கார்ப் அணிந்து செல்லலாம். முகத்திற்கு சன் ஸ்கிரீன் பயன்படுத்தலாம். உடல் வெப்பத்தை தவிர்க்க இளநீர், மோர், பழச்சாறுகள், நுங்கு, தர்பூசணி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் கையில் தண்ணீர் பாட்டிலுடன் வெளியில் செல்லலாம்.