வெள்ளை முடியைப் போக்க வீட்டிலேயே தயாரிக்கலாம் இயற்கை சாயம்!

Beauty tips
To get rid of white hair
Published on

யதானால் முடி நரைப்பது இயற்கை. ஆனால் வெள்ளை முடி நம் நம்பிக்கையைத் தகர்த்துவிடும். அதற்கு இயற்கையான தீர்வு உள்ளது. எந்தவித கெமிகல்களும் இல்லாமல் நாமே இதை தயாரிக்கலாம். இது முடியை கருப்பாக்குவதுடன் முடியை வலுவாகவும் ஆக்கும்.

இதற்குத் தேவையானவை:

வெங்காயத்தோல் மூன்று பெரிய வெங்காயத்தில் இருந்து

கறிவேப்பிலை. ஒரு கைப்பிடி

கருஞ்சீரகம் ஒரு டீஸ்பூன்

கிராம்பு 5

கடுகு எண்ணை. 1கப்

தயாரிப்பு

வெங்காயத்தோலை நீக்கி நன்கு கழுவி சுத்தம் செய்யுங்கள். ஆர்கானிக் வெங்காயம் சிறந்தது. அவைகளில் பூச்சி மருந்து பிரச்னை இருக்காது

ஒரு வாணலியில் வெங்காயத் தோல்களை சேர்க்கவும். கைப்பிடி கறிவேப்பிலை சேர்க்கவும். இதோடு கருஞ்சீரகம் மற்றும் கிராம்பு சேர்த்து வெங்காயத்தோல் கருப்பாகவும் வரை வறுக்கவும்‌ இப்படி வறுப்பதன் மூலம் முடிக்கு ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

வெங்காயத் தோல் கருப்பாக வறுபட்டதும் மிக்சியில் இதை அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணையை சேர்த்து அதில் இந்த பௌடரை சேர்த்து நல்ல மென்மையான பேஸ்ட் ஆக்கவும்.

பயன்பாடு

இந்த எண்ணையை தலையில் நரைமுடிகள் இருக்கும் இடத்தில் தடவவும் வேர்காலில் போய்ச் சேரவேண்டும். அரைமணி நேரம் அப்படியே வைத்திருங்கள். உங்களுக்கு நல்ல பலன் கிடைக்க முதல்நாள் இரவு தடவி மறுநாள் முடியை அலசவும்.

நன்மைகள்

வறுக்கப்பட்ட வெங்காயத்தோல், கறிவேப்பிலை மற்றும் கருஞ்சீரகம் முடியின் மெலானினை அதிகரிக்கச் செய்து நரைமுடியை கருப்பாக்கும்

கறிவேப்பிலை, கிராம்பு மற்றும் கருஞ்சீரகம் சேர்ப்பதால் முடியின் வேர்க்கால்கள் வலுவாகும். முடி உடைவதை தடுப்பது மற்றும் அடர்த்தியான கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிப்பு போன்ற பலன் கிடைக்கும்

இந்த இயற்கையான எண்ணை தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிப்பது, முடி மெலிவைத்தடுப்பது மற்றும் அபார முடிவளர்ச்சியைத் தூண்டுவது போன்றவற்றைத் தரும்

இந்த எண்ணை வேர்க்காலை பலப்படுத்துவதுடன் வறட்சி மற்றும் எண்ணைப் பசையை தடுத்து பொடுகு பிரச்னையையும் போக்கும்..

பூண்டுத் தோலையும் பயன்படுத்தி நரைமுடி பிர்ச்னையைத் தீர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
குளிர்காலத்தில் உதடு வெடிப்பைத் தடுக்கவும், நிறத்தைப் பாதுகாக்கவும் சூப்பர் டிப்ஸ்!
Beauty tips

பூண்டில் ஆன்டி பாக்டீரியல் பண்பு இருப்பதால் இது தலைமுடியை அரிப்பு மற்றும் பொடுகிலிருந்து பாதுகாக்கும். பூண்டு தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பண்பு பெற்றது. மேலும் இதன் சல்பர் கொலாஜன் புரதத்தை அதிகரிக்கச் செய்வதால் முடி வளர்ச்சி தூண்டப்படும். இதில் உள்ள செலினியம் மற்றும் துத்தநாகம் முடியை வலுவாக்கும்.

ஒரு கப் பூண்டு தோல்களை எடுத்துக் கொள்ளவும்.‌ இதில் இரண்டு டீஸ்பூன் டீத்தூள் சேர்க்கவும். இதில் கருவேலம் பிசின் ஒரு டீஸ்பூன் சேர்க்கவும். இது முடியை அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் மற்றும் கருப்பாகவும் ஆக்கும். இதில் ஆலிவ் ஆயில் சேர்த்து பயன்படுத்தலாம்.

தயாரிப்பு

பூண்டு தோல் கருகும்வரை வறுக்கவும் அதோடு டீபௌடர் சேர்க்கவும். இது ஆறிய பிறகு கருவேலம் பிசின் சேர்க்கவும் இதை பொடிசெய்து வைக்கவும். இதில் ஆலிவ் ஆயில் சேர்த்து இதைத் தலையில் தடவி அலசவும்

பூண்டுத் தோலின் சல்பர் வேர்க்காலை வலுவாக்கும். தலை அரிப்பு பொடுகு நீங்கும்‌ எந்த பின்விளைவுகளும் இல்லாத இயற்கை முடிச்சாயம் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com