

கூந்தல் பராமரிப்பு என்பது கூந்தல் முடி உதிராமலும், பொடுகுத் தொல்லையின்றியும், சிக்கல் இல்லாமலும் வைத்துப் பாதுகாப்பது என்று பொருள்படும். இம்மாதிரியான குறைபாடுகள் எல்லாம் ஒழுங்கில்லாத வாழ்வியல் முறை, இரசாயனம் கலந்த பொருட்களை உபயோகித்தல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் வருபவைதான். இக்குறைபாடுகள் நீங்க, நாம் எடுத்துக் கொள்ளும் சிகிச்சை முறைகள் இரசாயனம் கலந்து பக்க விளைவுகளை உண்டு பண்ணுவதாகவும் அதிக செலவு பண்ணச் செய்வதாகவும் இருக்கும்.
அதற்குப் பதில் குறைந்த செலவில், பக்கவிளைவுகள் ஏதுமில்லாமல், ஐந்து வகையான விதைகளை பயன்படுத்தி அடர்த்தியான, வலுவான கூந்தலை சில மாதங்களிலேயே பெறமுடியும். அந்த விதைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
அல்சி (Alsi) எனப்படும் ஃபிளாக்ஸ் விதைகள்: முடியின் வேர்க்கால்களைச் சுற்றியுள்ள நுண்ணறைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், ஸ்கால்ப் பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவக் கடிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த விதைகள் இவை. முடி உதிர்வுக்குக் காரணமாகும் வீக்கங்களைக் குறைக்கவும் இந்த அமிலம் உதவும்.
மேலும் இந்த விதைகளில் நிறைந்துள்ள வைட்டமின் B, பயோட்டின் மற்றும் ஃபோலிக் ஆசிட் போன்ற ஊட்டச்சத்துக்கள் கூந்தல் வலுவானதாக வளர உதவிபுரிகின்றன. ஃபிளாக்ஸ் விதைகள் ஈரப்பதத்தை தக்க வைத்து முடி வறட்சியடையாமல் பாதுகாக்கவும் ஸ்கால்ப் பகுதியின் pH அளவு சமநிலை பெறவும் உதவி புரிகின்றன.
மேத்தி எனப்படும் வெந்தயம்: பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட்டு ஸ்கால்ப் ஆரோக்கியம் பெறஉதவும் விதை வெந்தயம். வேர்க்கால் பகுதியிலுள்ள நுண்ணறைகளில் உண்டாகும் சிதைவுகளை சீர்ப்படுத்தி வேர்க்கால்கள் வலுப்பெறவும் முடி பள பளப்புப் பெறவும் உதவும். ஹேரகா ஆயிலில் வெந்தயத்தை ஊற வைத்து அந்த எண்ணெயை தொடர்ந்து உபயோகித்து வந்தால், முடி புத்துயிர் பெற்று, உடையாமலும், சிக்காகாமலும் பாதுகாக்கப்படும்.
டில் (Til) எனப்படும் எள் விதை: பட்டுப்போன்ற பள பள கூந்தல் பெற உதவும். எள் விதைகளில், லட்டு, சட்னி போன்ற உணவுப் பொருட்கள் செய்து சாப்பிடலாம். நல்லெண்ணெய்யால் தலையில் அழுத்தி மசாஜ் செய்யலாம். இதிலுள்ள B காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் E, கால்சியம், ப்ரோட்டீன், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளிருந்து உரமாகி தொற்றுக்களின்றி முடியின் வேர்க்கால்கள் வலுவடைய உதவுகின்றன.
கருஞ்சீரகம் எனப்படும் களோஞ்சி விதைகள்:
ஸ்கால்ப் மற்றும் வேர்க்கால்ப் பகுதி நுண்ணறைகளின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, புதிது புதிதாக முடிகள் தோன்றி செழித்து வளர உதவி புரிபவை களோஞ்சி விதைகள். முடி வளரும் சுழற்சியை ஒழுங்குபடுத்தி, முன்கூட்டியே முடி உதிர்வதை தடுத்து நிறுத்தும் குணம் கொண்டது. வெது வெதுப்பான களோஞ்சி எண்ணெய்யை தொடர்ந்து ஸ்கால்ப்பில் தடவி வந்தால் முடி வறட்சி மற்றும் பொடுகுகள் நீங்கும். ஆரோக்கியமாக முடி வளரும்.
பெருஞ்சீரகம்: இது ஸ்கால்ப்பில் உள்ள தொற்று நோய்க் கிருமிகளை நீக்கும். முடி உதிர்வை தடுக்கும். இதிலுள்ள காப்பர், ஃபொலேட், நியாசின் மற்றும் இரும்புச் சத்துக்கள், ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி, முடி மெலிவடைவதைத் தடுக்க உதவுகின்றன.
பெருஞ்சீரகத்தை நசுக்கி தேங்காய் எண்ணெய்யில் போட்டு ஊறவைத்து வடிகட்டி அந்த எண்ணெய்யை தலையில் தடவலாம். பவுடர் ஆக்கி தேங்காய் பால் அல்லது ஆலூவேரா ஜெல்லுடன் கலந்து ஹேர் மாஸ்க் போடலாம். எதுவானாலும் பெருஞ்சீரகத்தை அளவோடு உபயோகிப்பதே ஆரோக்கியம். இல்லையெனில் இயற்கையாக ஸ்கால்ப்பிலிருக்கும் எண்ணெய்ப் பசையை பிரித்தெடுத்துவிட வாய்ப்பாகிவிடும்.