

நாம் சமைப்பதற்கு பயன்படுத்தும் முக்கியமான சமையல் பொருட்களில் தக்காளியும் ஒன்று. இது உடல் ஆரோக்கியம் மட்டுமில்லாமல் சரும ஆரோக்கியத்திற்கும் நல்ல அற்புத பலன்களை செய்கிறது. தக்காளசாறை சருமத்தில் பயன்படுத்தினால் பல நன்மைகள் கிடைக்கும். பளபளப்பான சருமத்திற்கு தக்காளியை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
தக்காளி + தேன்
2 ஸ்பூன் தக்காளி கூழ் + 2 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் சமமாக பூசி 10 நிமிடம் கழித்து தண்ணீர் விட்டு கழுவுங்கள். இதனால் முகம் மிருதுவாகும். வாரம் இருமுறை செய்யலாம்.
தக்காளி + பப்பாளி
2 ஸ்பூன் தக்காளி,பப்பாளி கூழ் 2 ஸ்பூன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து நீரில் முகத்தை கழுவவேண்டும். இதனால் முகப்பரு, தழும்புகள் மறையும். வாரம் இருமுறை இதனை செய்யலாம்.
தக்காளி + தேயிலை மர எண்ணெய்
உஸ்பூன்தக்காளி கூழ், தேயலை மரஎண்ணெய் சில துளிகள் சேர்த்து முகம் முழுவதும் தடவி 10 நிமிடங்கள் கழித்து நீர் விட்டு கழுவவும். தக்காளி சருமத்தின் பிஹெச் அளவை சரி செய்து, சரும வெடிப்புகளை தடுத்து, தேயிலை எண்ணெய் கலப்பதால் முகப்பருவராமல் தடுக்கிறது. வாரம் 2 முதல் 3 முறை செய்யலாம்.
தக்காளி + மஞ்சள்
சிறிதளவு தக்காளி சாறுடன், சிறிது மஞ்சள் தூள், சந்தனப்பொடி கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி காய்ந்த பின் வெது வெதுப்பான நீரில் கழுவவும். தக்காளியில் வைட்டமின் சி. ஈ பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால் நிறத்தை மேம்படுத்தி, முகத்தை பிரகாசமாக்கும்.
தக்காளி + கேரட்
தக்காளி, கேரட் இரண்டையும் மசித்து இதனுடன் பாதம் தூளும் சேர்த்து கலந்து ஸ்மூத்தியாக இதை தினமும் குடித்து வந்தால் முகப்பரு, சுருக்கங்கள், தோல் நிறம் கொடுத்து முகம் பளபளப்பாகும்.
தக்காளி+ எலுமிச்சை சாறு
தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு சில துளிகள் கலந்து முகம் முழுவதும் தடவினால் பெரிய துளைகள் சுருங்கிவிடும் 15 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் வெடிப்புகள் நீங்கி பொலிவாகும்.
குறிப்பு
தக்காளி சருமத்திற்கு நல்லது என்றாலும் தக்காளியில் அமிலத்தன்மை இருப்பதால் சிலருக்கு சரும ஒவ்வாமை ஏற்படும் தக்காளியை முகத்தில் தடவினால் எரிச்சல் ஏற்பட்டால் உடனே பயன்படுத்துவைதை நிறுத்தவும் எரிச்சல், சிவத்தல், உரிதல் போன்றவை ஏற்பட்டால் தக்காளியை பயன்படுத்துவது தவிர்க்கவும். சரும மருத்துவரிடம் அணுகி கேட்டுசெய்யவும்.