வெறும் ₹10 வாஸ்லின் போதும்... உங்க மேக்கப் செலவை 'ஜீரோ' ஆக்கலாம்!

7 benefits of Vaseline
7 benefits of Vaseline
Published on

நிறைய பேர் நினைப்பது என்னவென்றால் வாஸ்லின் (Vaseline) வறட்சியான பாதங்களுக்கு பயன்படுத்தப்படும் கிரீம் என்று. ஆனால், இதை பயன்படுத்தி உங்கள் அழகை மேம்படுத்த முடியும். மற்றவர்கள் மேக்கப்பிற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் எந்த பலனையும் பார்க்க முடியாத போது வெறும் விலைமலிவான வாஸ்லினை மட்டுமே பயன்படுத்தி முழு உருவத்தையும் மேம்படுத்திக்கொள்ள முடியும். இந்த பதிவில் 7 வாஸ்லின் Hacks பற்றி காண்போம்.

1. சிறிய அளவில் வாஸ்லினை எடுத்து அதை உங்களுடைய Jaw line-ல் தடவி விடுங்கள். இவ்வாறு செய்யும் போது ஒரு மெல்லிய நிழல் போன்ற பிம்பம் உருவாகும். அது நம்முடைய Jawline ஐ நேர்த்தியாக காட்டும். இதே டெக்னிக்கை தான் புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுக்கும் போது மாடல்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

2. அடர்த்தியான புருவம் ஆண்களுக்கு அழகைக் கூட்டும். அடர்த்தி குறைந்த புருவங்கள் உங்கள் அழகை கெடுப்பதாக இருக்கும். அதற்கு சரியான தீர்வு, விரல்களில் சிறிய அளவில் வாஸ்லினை எடுத்து நன்றாக குழைத்து புருவத்தில் தேய்க்கவும்.

இவ்வாறு செய்யும் போது புருவம் இயற்கையாகவே நல்ல அடர்த்தியாக இருப்பது போல தெரியும். புருவத்தில் உள்ள ஒவ்வொரு முடியையும் முழுமையாகவும், கருமையாகவும் தெரிவதற்கு வாஸ்லின் உதவுகிறது.

3. வெடிப்பான வறண்ட உதடுகள் யாருக்கு தான் பிடிக்கும்? இது உங்கள் வசீகரத்தை குறைக்கக்கூடியதாக இருக்கும். முதலில் பற்களை துலக்கவும். பிறகு அதே பிரஷை வைத்து உதடுகளை மென்மையாக தேய்த்து விடவும். இதனால் உதடுகளில் உள்ள எல்லா இறந்த செல்களும் நீங்குவதோடு ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். பிறகு வாஸ்லினை சிறிதளவு எடுத்து உதட்டில் தடவுங்கள். இதை தினமும் இரவு செய்து வந்தால் உதடுகள் ஈரப்பதத்துடன் ஆரோக்கியமாக மாறும். 

4. உங்களுடைய கூந்தல் உடைந்து, வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா? வாஸ்லினை சிறிதளவு விரல்களில் எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக கைகளில் குழைத்து தலைமுடியில் தடவிக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் முடி பார்ப்பதற்கு பளப்பளப்பாகவும், அழகாகவும் தெரியும்.

5. கண்களை சுற்றியுள்ள கருவளையம் நம்முடைய தோற்றத்தை வயதானவரை போல காட்டும். இது உங்கள் வசீகரத்தன்மையை குறைத்துவிடும். இரவு துங்க செல்லும் முன்பு சிறிதளவு வாஸ்லினை கண்களுக்கு கீழே தடவி வர கண்களை சுற்றியுள்ள கருவளையம், Puffiness போன்ற பிரச்னைகளை உடனடியாக போக்கும். இதை இரண்டு வாரம் தொடர்த்து செய்து வந்தாலே நல்ல மாற்றத்தை உணர முடியும்.

6. நாம் பயன்படுத்தும் வாசனை திரவியம் எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலுமே அதனுடைய வாசனை மூன்று மணி நேரம் வரையே நீடிக்கும். அதற்கு சரியான தீர்வு, முதலில் வாஸ்லினை நன்றாக உருக்கிக் கொள்ளவும். இதில் உங்களுக்கு பிடித்த வாசனை திரவியத்தை கலந்துவிட்டுக் கொள்ளவும். பிறகு அதை பல்ஸ் பாயின்டில் (Pulse point) தடவிக் கொள்ளவும். கழுத்து, மணிக்கட்டு, காதுகளுக்கு பின்புறம் தடவவும். இதனால் உங்கள் மீது வாசனை 8 முதல் 10 மணி நேரம் வரை நன்றாகவே தெரியும்.

இதையும் படியுங்கள்:
துளசியை இப்படி பயன்படுத்துங்க: பளபளப்பான முகம் நிச்சயம்!
7 benefits of Vaseline

7. நிறைய மாடல்களை பார்க்கும் போது அவர்களுக்கு மிகவும் பிரஷ்ஷான லுக் இருக்கும். இதற்கு காரணம் வாஸ்லின் தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? சிறிது அளவு வாஸ்லினை எடுத்து நெற்றியிலும், Cheek bone-னிலும் தடவிக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருப்பது போன்ற தோற்றத்தை உடனடியாக தரும். இந்த ஒரு டிரிக் உங்கள் தன்னம்பிக்கையை பல மடங்கு அதிகரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com