பெண்களுக்கு எந்த அளவு ஆடை, ஆபரணங்கள் கூடுதல் அழகு சேர்க்கிறதோ அந்த அளவிற்கு ஹேர் ஸ்டைலும் முக்கியம். அந்த தான் ஹேர் க்ளிப்ஸ், பேண்ட்ஸ் எல்லாம் உருவாக்கப்பட்டுள்ளது. வகை வகையாக ஹேர் க்ளிப்ஸ், பேண்ட்ஸ் எல்லாம் வந்திருக்கிறது. வருடத்திற்கேற்ப ஒவ்வொரு ஹேர் ஸ்டைலும், பேண்டுகளும் ட்ரெண்டாகும்.
ஹேர் பேண்டுகள் முடியை இருக்கி கட்ட பயன்படுகிறது. தலை முடி கலையாமல் இருக்க, போட்ட ஹேர் ஸ்டைல் கலையாமல் இருக்க இந்த மாதிரியான ஹேர் பேண்டுகளை உபயோகிப்பார்கள். இந்த ஹேர் பேண்டுகள் மெட்டல், பிளாஸ்டிக் மற்றும் காட்டன் துணி போன்ற பல்வேறு வெரைட்டிகளில் கிடைக்கிறது.
இது உங்கள் ஆடைகளுக்கு மேட்சிங்காகவும், அழகாகவும் இருக்கும். சிறந்த ஹேர் பேண்டுகளின் பிராண்டுகள் பற்றியும் அதன் வெரைட்டிகள் பற்றியும் இந்த தொகுப்பில் விரிவாக காணலாம். இந்த வெரைட்டி ஹேர் பேண்டுகளை 500 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கி கொள்ளலாம்.
மாடர்ன் உடை அணியும் போது இந்த மாதிரியான ஹேர் பேண்டுகளை யூஸ் பண்ணலாம். உங்களை மேலும் அழகாக காட்டும்.
இந்த ஹேர் பேண்ட் ஹை-குவாலிட்டி பிளாஸ்டிக் மெட்டீரியலால் ஆனது (Plastic hair band). அதன் மீது அதிக மிருதுவான மற்றும் மென்மையான துணியால் கவர் செய்யப்பட்டுள்ளது. இது முடிப்பு போன்ற டிசைனை கொண்டுள்ளதால், அழகான தோற்றத்தை பெற முடியும். இது பெண்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது.
இந்த மினிஸோ டாட் ஹேர் பேண்ட் (Miniso hair band) நன்கு வளையும் தன்மை கொண்ட ஹை-குவாலிட்டி எலாஸ்டிங் மெட்டீரியலால் ஆனது. இதில் புள்ளிகள் அடங்கிய பேட்டர்ன் மற்றும் முடிப்பு போன்ற டிசைனை கொண்டுள்ளதால், அழகான தோற்றத்தை பெற முடியும். இதனை சுலபமாக வாஷிங் மெஷின் கொண்டு சுத்தம் செய்து கொள்ளலாம்.
இந்த சிக்சேக் ஹேர் பேண்ட் (Zigzag hair band) ஆண், பெண் இருவரும் பயன்படுத்துவதற்கு உகந்தது. இது ஹை-குவாலிட்டி மெட்டல் மூலம் தயாரிக்கப்படுவதால், எளிதில் சேதமடையாது மற்றும் நீடித்து உழைக்க கூடியது ஆகும். இந்த காம்போ பேக்கில் மொத்தம் 2 ஹேர் பேண்டுகளை பெறலாம். இதன் லைட் வெயிட் எடை மற்றும் வளையும் தன்மை மூலம் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும்.
- விஜி