வெறும் 7 நாட்கள் தான்.. வீட்டில் உள்ள பொருட்களால் ஈஸியாக நரை முடியை கருப்பாக்கலாம்.. இதை மட்டும் பண்ணுங்க!
வயது அதிகரிக்கும்போது, நமக்கு பலவித சரும பிரச்சனையும், முடி பிரச்சனையும் வரத்தான் செய்கிறது. அதிலும், நரைத்த முடி வந்துவிட்டால், பாதி வாழ்க்கையே முடிந்து போய்விட்டதென கவலை அடைவோர் தான் நம் நாட்டில் அதிகம். முன்பெல்லாம், நரைத்த முடி தான் ஒருவருடைய வயதையே தீர்மானித்தது. ஆனால் இன்று இளம் வயதிலேயே நரைத்த முடி வந்துவிடுகிறது. இதற்கு காரணமாக மனஅழுத்தம், தவறான உணவு பழக்கவழக்கம், கெமிக்கல் பயன்பாடு மற்றும் முடிக்கு கலர் அடித்தல் போன்றவை உள்ளது. பொதுவாக நாம் இதற்கு தீர்வாக தேடி செல்வது ஹேர் டையை தான். அப்படி செயற்கை முறையிலான ஹேர்டையை பயன்படுத்துவது மூலம் முடி கொட்டுவதே அதிகமாகிறது. கெமிக்கல் நிறைந்த ஹேர்டையை பயன்படுத்துவதற்கு பதிலாக நாம்
இயற்கையான பொருட்களை கொண்டு வீட்டிலேயே ஹேர்டை செய்து தலைமுடியை கருப்பாக மாற்றலாம்.
வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டே எளிதாக நாம் இந்த ஹேர்டையை தயாரிக்கலாம். அது எப்படி என பார்க்கலாம் வாங்க.
பாதாம் ஹேர்டை:
தலைமுடியை இயற்கையாக கருமையாக்குவதற்கான சில இயற்கையான ஹேர்டை பற்றி பார்ப்போம்..
பாதாம், காப்பர், மெலனினை உற்பத்தி செய்கிறது. இதனால் நரைமுடி ஏற்படுவது குறையும். பாதாமை முதல் நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அதை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
அரைத்த பேஸ்ட்டை வடிக்கட்டி சாறை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும். தலைமுடியை ஷாம்பு வைத்து அலசிய பின்னர், வடிக்கட்டிய பாதாம் சாறை உங்கள் தலையில் தேய்த்து 5 நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும். இதையடுத்து, 15 நிமிடம் கழித்து முடியை அலசவும். வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
பிளாக் காஃபி:
நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு காபி பழமையான வீட்டு வைத்தியமாகும். 2 கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து 5 டீஸ்பூன் காபி தூள் சேர்த்து நன்கு ஆற வைக்கவும். அதன் பின் தலைமுடியில் தடவவும். அரை மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் தலைமுடியை அலசவும்.
இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் காணலாம்.