வீட்டிலிருந்தே அழகாக்க உதவும் பழ பேக் (Fruit pack) வகைகள்!

Fruit pack
Fruit packImage credit - pixabay.com
மகாலெட்சுமி சுப்ரமணியன்

நான் மகாலெட்சுமி சுப்ரமணியன்.கல்கி குழுமத்தின் நெடுநாள் வாசகி.எனக்கு எழுதுவதிலும்,படிப்பதிலும் ஆர்வம் அதிகம்.வீட்டிலிருந்தே சிறிய அளவில் தோழியின் விழாக்களுக்கு கேட்டரிங் செய்து கொடுக்கிறேன்.வீட்டு தோட்டத்தில் விளைந்த காய்,கனிகளை சிறிய அளவில் விற்பனை செய்கிறேன்.பிசியாக என்னை வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொள்கிறேன்.

Updated on: 

கமலா ஆரஞ்சு சாறுடன் இரண்டு மூன்று துளி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விட்டு ‌மெல்லிய காட்டன் துணியால் முகத்தில் தொட்டு ஒற்றி எடுக்க முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் மறைவதுடன் நல்ல கலரையும், பளபளப்பையும் தரும்.

வாழைப்பழம், தர்பூசணி, பப்பாளி, உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய் இவற்றை சிறு துண்டுகளாக வெட்டி அதை சிறு மஸ்லின் துணியில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின் இதை எடுத்து கண்களுக்கு மேல் சிறிது நேரம் வைக்க புத்துணர்வைத் தரும்.

இதையும் படியுங்கள்:
உடலின் 5 முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் ஒரே காய்கறி!
Fruit pack

தர்பூசணி ஜுஸை ஃப்ரிட்ஜில் வைத்து கட்டிகளாக ஆனதும் அதை எடுத்து முகம், கை, கால்களில் ஒற்றி எடுக்க சொரசொரப்பு நீங்கி சருமம் மிருதுவாகும். நல்ல நிறத்தையும் கொடுக்கும்.

ஆரஞ்சு பழத்தின் தோலை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் வெந்தயத்தூளை சேர்த்து தலையை அலச பேன், பொடுகு, அரிப்பு நீங்கி கூந்தல் பளபளப்பாகும்.

அரை டீஸ்பூன் ஜாதிக்காய் பவுடர், மாசிக்காய் பவுடர் அரை டீஸ்பூன் எடுத்து அன்னாசி பழச்சாற்றில் கலந்து, முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவ சருமம் பளிச்சென்று இருக்கும்.

Fruit pack
Fruit packImage credit pixabay.com

மாதுளை ஜுஸுடன் வெட்டி வேர் பவுடர் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பருக்களின்றி பளிச்சிடும்.

கொட்டை எடுத்த பேரீட்சையை அரைத்து தர்பூசணி சாறுடன் கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவ டல்லான முகம் பொலிவாகும்.

பப்பாளி பழத்தை மசித்துக் கொண்டு அதை முகம், கழுத்து பகுதிகளில் தடவி கழுவிட கருமை நீங்கி முகம், சருமம் பளிச்சென்று இருக்கும்.

இவ்வாறு பல பழங்களை பேக் காக வீட்டிலிருந்தே போட்டு அழகை பாதுகாக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com