"டில் கா தேல்" உபயோகித்தால் முடி ஆரோக்கியமா வளருமாமே!

hair care
hair careImage credit - pixabay
Published on

ங்கிலத்தில் சீசேம் ஆயில் (Sesame oil), ஹிந்தியில் "டில் கா தேல்" எனப்படும் நல்லெண்ணெய், எள் எனப்படும் தாவர விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஓர் உண்ணக்கூடிய உணவு. பழங்காலம் தொட்டு உபயோகத்தில் இருந்து வரும் இந்த எண்ணெய் முடி மற்றும் சருமத்திற்கு பல ஆரோக்கிய நன்மைகள் தரக் கூடியது. இந்த எண்ணெயிலிருந்து பெறக்கூடிய நன்மைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் காணலாம்.

ஸ்கால்ப் எனப்படும் தலைப்பகுதியின் சருமத்திற்கு  இரத்த ஓட்டம் தடையின்றி செல்ல இந்த எண்ணெய் உதவும். இதில் ஒமேகா -3 மற்றும் ஒமேகா - 6 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை முடியின் அடர்த்தி குறைவதைத் தடுக்கவும் முடி ஆரோக்கியமாக வளரவும் உதவும். இந்த எண்ணெயை நேரடியாக தலையில் தேய்க்கலாம் அல்லது வேறொரு இயற்கை முறையில் தயாரிக்கப்படும் எண்ணெயுடன் கலந்தும் உபயோகிக்கலாம்.

நல்லெண்ணெயை கையில் ஊற்றி இரண்டு உள்ளங் கைகளாலும் நன்கு தேய்த்துப் பிறகு தலையின் சருமப்பகுதி முழுவதும் மெதுவாக மசாஜ் செய்து இருபது நிமிடங்கள் வரை விட்டு விடவும். பிறகு மிருதுவான தன்மை கொண்ட ஷாம்புவினால் அலசி கழுவிவிட முடி ஆரோக்கியம் பெறும். முடியை கண்டிஷன் பண்ணுவதற்கு, நல்லெண்ணெயை தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் கலந்து முடியில் தடவி அரை மணி நேரம் கழித்து மிருதுவான ஷாம்பு உபயோகித்து கழுவி விடலாம்.

நல்லெண்ணெயுடன் சம பங்கு வேப்பெண்ணெய் கலந்து அந்த கலவையை முடியில் தேய்த்து அரை மணி நேரம் அப்படியே வைத்துவிடவும். பின் மிருதுவான க்ளீன்சர் கொண்டு அலசி சுத்தம் செய்யவும். இப்போது முடி மிருதுத் தன்மையுடன் பட்டுப்போன்ற பள பளப்பு பெறும். மேலும் நல்லெண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் ஸ்கால்ப் (Scalp) பகுதியை ஈரத் தன்மையுடன் வைத்து, பொடுகு போன்ற செதில்கள் உண்டாகாமலும், முடி காய்ந்து போகாமலும் பாதுகாக்கும். 

நாள் முழுவதும் பலவித இடர்பாடுகளுக்கு  உட்படுத்தப் படுவது நமது முடி. நல்லெண்ணெய் முடியின் வேர்க்கால்களுக்கு உள்ளே ஆழமாக ஊடுருவிச் சென்று ஊட்டச்சத்துக்களை வழங்குவதால்  முடி ஆரோக்கியம் பெற்று மினு மினுப்பான தோற்றம் தரும்.

இதையும் படியுங்கள்:
திருமண சங்கீத் வைபவத்தில் பெண்கள் அணியும் லேட்டஸ்ட் ஃபேஷன் உடைகள்!
hair care

சுற்றுச்சூழல் மாசுகளால் முடிக்கு உண்டாகும் பாதிப்பு களிலிருந்தும், சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர் வீச்சுக்களின் தாக்குதலால் ஏற்படும் தீங்குகளிலிருந்தும் நல்லெண்ணெய் ஓர் இயற்கை முறை தடுப்பானாக செயல்பட்டு முடியைப் பாதுகாக்கும்.

வாரம் இருமுறை தலையில் "டில் கா தேல்" (நல்லெண்ணெய்) குளிரக் குளிரத்தேய்த்து சீயக்காய் போட்டு குளித்து வர ஸ்கால்ப் நல்ல ஆரோக்கியம் பெற்று முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.  ஏனெனில் இதில் வைட்டமின் E, B-காம்ப்ளெக்ஸ், மக்னீசியம், கால்சியம், ஒமேகா -3 மற்றும் ஒமேகா - 6 கொழுப்பு அமிலங்கள் ஆகிய சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளன. இதையே நம் முன்னோர்கள் காலம் காலமாகப் பின்பற்றி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com