முகப்பொலிவை அதிகரிக்கும் ஆரஞ்சு தோல்.. எப்படி பயன்படுத்தணும் தெரியுமா?

Use orange peel to increase facial glow.
Use orange peel to increase facial glow.

உங்களுக்கு ஆரஞ்சு பழம் ரொம்ப பிடிக்குமா? ஆரஞ்சு பழம் சாப்பிட்டுவிட்டு அதன் தோலை என்ன செய்கிறீர்கள்? தூக்கிக் குப்பையில் போட்டுவிடுவோம் அப்படி தானே? ஆனால் இனி நீங்கள் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் அந்தத் தோலை பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதைப் பயன்படுத்தி நமது முகத்தை பளபளப்பாக மாற்ற முடியும். அது எப்படி என்ற குறிப்பை இந்தப் பதிவில் பார்க்கலாம். 

ஆரஞ்சு பழத்தில் எப்படி உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளதோ, அதேபோல அதன் தோலிலும் நம் சருமத்திற்கு நன்மை பயக்கும் சில ரசாயனக் கலவைகள் உள்ளன. ஆனால் அப்படியே அந்தத் தோலை முகத்தில் தடவினால் எரிச்சலாக இருக்கும். அதற்கு முதலில் ஆரஞ்சு தோலை வெயிலில் நன்கு காய வைத்து, மிக்ஸியில் போட்டு பவுடராக்கி, ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரையும் நேரடியாக முகத்தில் தேய்க்கக்கூடாது. குறிப்பாக வாரம் இருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

ஆரஞ்சு பவுடரை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

  • முதலில் ஆரஞ்சு பழ தோல் பவுடருடன் பசும்பால் சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ச்சியான நீரில் முகத்தைக் கழுவினால், முகம் பளபளப்பாக மாறி, பிரகாசமாக மாறிவிடுவீர்கள்.

  • சர்க்கரை தேன் ஆகியவற்றை ஆரஞ்சு தோல் பவுடரில் சேர்த்து, முகத்தில் தடவி மசாஜ் செய்தால், முகத்தில் இறந்த செல்களை நீக்க உதவும். குறிப்பாக வறண்ட சருமம் உடையவர்கள் இதைப் பயன்படுத்தும்போது, நல்ல பலன் கிடைக்கும். 

  • ஆரஞ்சு பழ தோலில், பால், பாதாம் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து, அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும். 

  • அதேபோல ஆரஞ்சு பழத் தோலில் தயிரைக் கலந்து முகத்தில் தடவி வந்தாலும், சுருக்கங்கள் மறைந்து, முகத்திற்கு இயற்கையான வெண்மையைக் கொடுக்கும். 

  • முகப்பரு வராமல் தடுப்பதற்கு வேப்ப இலையை அரைத்து அதில் ஆரஞ்சு தோல் பவுடர் மற்றும் தயிர், தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால், முகப்பருக்கள் வராது. குறிப்பாக எண்ணெய் சருமம் உடையவர்கள் இதைப் பயன்படுத்தி வரும்போது, நல்ல பலன் கிடைக்கும். ஏற்கனவே முகப்பரு வந்தவர்கள் இதை பயன்படுத்தினால் எரிச்சலாக இருக்கும். எனவே கவனமாகப் பயன்படுத்துங்கள். 

இதையும் படியுங்கள்:
செயற்கை நுண்ணறிவின் எதிர்காலமும், சமூகத் தாக்கங்களும்! 
Use orange peel to increase facial glow.

முகத்தில் பல செயற்கை இரசாயனக் கலவைகளைத் தடவி சருமத்தை கெடுத்துக் கொள்வதற்கு பதிலாக, இப்படி இயற்கையான முறையில் சருமத்திற்கு ஊட்டம் கொடுக்கும்போது, என்றும் இளமையான தோற்றத்தில் இருக்கலாம். மேலும் முகம் பொலிவு பெற, வெறும் மேற்பூச்சுகளை மட்டுமே பூசிக் கொண்டிருக்காமல், ஆரோக்கியம் நிறைந்த காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com