பலாஸோ கல்லூரி பெண்கள் தொடங்கி வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை அனைவருக்கும் இது பெஸ்ட் உடையாகவும், சௌகரியமாகவும் உள்ளது. சமீபத்தில் பலோசா பேண்ட் ரொம்ப ட்ரெண்டாகி வருகிறது. ஜீன்ஸ் லெகின்ஸ் எல்லாம் பிட்டாக இருப்பதால் பலருக்கும் அது சில நேரங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.ஆனால், பலாசோ பேண்ட் அப்படி இல்லை. அனைத்து தரப்பினருக்கும் பெர்ஃபெக்கட்டாகவே இருக்கும்.
வெஸ்டெர்ன் ஸ்டைல்:
நீங்கள் சற்று டிரெண்டியானவர் எனில் ஃபிரீ ஸ்டைல் பலாஸோ தேர்வு செய்து அதற்கு பக்காவான எதிர் நிறத்தில் டாங்க் டாப் அல்லது கிராப் டாப் தேர்வு செய்யுங்கள். இது கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் இருவருமே முயற்சி செய்யலாம். ஃபிரீ ஹேர் விட்டு சிம்பிள் மேக்அப் செய்தால் பக்காவாக இருக்கும்.
மாடர்ன் ஸ்டைல்:
உங்களுக்கு பிரிண்டுகள் அடங்கிய பலாஸோ பேன்ட் அணிவதுதான் பிடிக்கும் எனில் அதற்கு பொருத்தமான அடர் நிற டீ.ஷர்ட் அணியலாம். இது கல்லூரி பெண்களுக்கு பாப்அப் லுக் தரும். இதற்கு ஸ்னீக்கர்ஸ், லெதர் பின் பக்க பேக் அணிந்தால் சூப்பராக இருக்கும்.
எதினிக் ஸ்டைல்:
பருத்தி அல்லது லினல், சில்க் என பிடித்த ஃபேப்ரிகில் நீளமான டாப் எடுத்து அதற்கு எதிர் நிறத்தில் அல்லது அதே நிறத்திலும் பலாஸோ மேட்ச் செய்யலாம். இந்த லுக் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஸ்டைலிஷாக இருக்கும். இதற்கு ஜூட் வகை காலணிகள் அணியலாம்.