முடி வளர்ச்சியை அதிகரிக்கும் 7 சைவ உணவுகள்! 

 Hair Growth
Vegetarian Foods That Boost Hair Growth!
Published on

கூந்தலை பளபளப்பாகவும், நீளமாகவும் பராமரிப்பது பலரது கனவாக உள்ளது. நமது தலைமுடி நம் அழகைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றது. அது நம் உடல் ஆரோக்கியத்தின் அடையாளமாகவும் உள்ளது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்க பல செயற்கை முறைகள் இருந்தாலும் இயற்கையான வழியில் முடியை வளர்க்கும் ஆர்வம் மக்கள் மத்தியில் என்றுமே உள்ளது. சைவ உணவு முறையைப் பின்பற்றுபவர்கள் தங்களது உணவு முறையிலேயே முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களைப் பெற முடியும். இந்த பதிவில் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 7 சைவ உணவுகள் பற்றி விரிவாகப் பார்ப்போம். 

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் 7 சைவ உணவுகள்: 

  1. பருப்பு வகைகள்: பருப்பு வகைகளில் புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை முடி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை. பருப்பு வகைகளை ரசம், கூட்டு, அப்பளம் போன்ற பல்வேறு வடிவங்களில் உணவாக எடுத்துக் கொள்ளலாம். 

  2. பச்சை இலைக் காய்கறிகள்: பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ, சி , கே மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளன. இவை முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி முடி உதிர்வைக் குறைக்கின்றன. பச்சை இலைக் காய்கறிகளை சாலட், சூப் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம். 

  3. கேரட்: கேரட்டில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ முடியின் வளர்ச்சிக்கு அவசியமானது. கேரட்டை கூட்டாகவோ, பொறியலாகவோ, ஜூஸ் போலவோ எடுத்துக் கொள்ளலாம். 

  4. வெங்காயம்: வெங்காயத்தில் சல்ஃபர் நிறைந்துள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முடியை வலுவாக வைக்க உதவுகிறது. வெங்காயத்தை பச்சையாகவோ அல்லது சமையலில் சேர்த்தோ உட்கொள்ள முடியும். 

  5. அவகாடோ: அவகாடோ பழத்தில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை முடியை வலுப்படுத்தி உச்சந்தலையின் வறட்ச்சியைப் போக்கி, முடி உதிர்வைக் குறைக்கின்றன. 

  6. பாதாம்: பாதாமில் வைட்டமின் ஈ, மகனீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடி உதிர்வைக் குறைக்கின்றன. தொடர்ச்சியாக பாதாம் சாப்பிட்டு வருவதால், முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும். 

  7. விதைகள்: எள், சூரியகாந்தி விதை, பூசணி விதை போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை, முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடி உதிர்வைக் குறைக்க உதவும். விதைகளை சாலட், தயிர் போன்றவற்றில் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். 

இதையும் படியுங்கள்:
சைவ உணவு உண்பதால் கிடைக்கும் 12 நன்மைகள் தெரியுமா?
 Hair Growth

நீங்கள் சைவ உணவு சாப்பிடுபவராக இருந்தாலும் சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம், ஆரோக்கியமான முடியைப் பெற முடியும். மேற்கண்ட உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமான முடியைப் பெறலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com