இயற்கையாக உங்கள் சரும ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டுமா? அப்படியானால் வால்நட் எண்ணெய் பயன்படுத்துங்கள். வால்நட் மரத்தின் கொட்டைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இந்த எண்ணெய் சருமத்திற்கு எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது. இந்த பதிவில் சருமத்தில் அவ்வப்போது வால்நட் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஈரப்பதம்: முகத்தில் வால்நட் எண்ணெய் தடவுவதால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. இதில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சருமத்திற்கு இயற்கையான ஈரப்பதத்தைக் கொடுக்கிறது. வறண்ட சருமம் உள்ளவர்கள் தொடர்ச்சியாக வால்நட் எண்ணெய் பயன்படுத்துவது நல்ல பலனளிக்கும்.
ஆக்சிஜனேற்றப் பண்பு: வால்நட் எண்ணெயில் விட்டமின் ஈ மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆக்சனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவை சுற்றுச்சூழல் மாசுபாடுகள் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு ஆகியவற்றால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன. வால்நட் எண்ணெய் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதால், முகத்தில் உள்ள சுருக்கம், புள்ளிகள் நீங்கி எப்போதும் இளமையான தோற்றத்தைக் கொடுக்கிறது.
தோல் நெகிழ்வுத்தன்மை: வால்நட் எண்ணெயில் உள்ள லினோலிக் அமிலம் மற்றும் ஒலிக் அமிலம் போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், தோல் நெகழ்வுதன்மைக்கு முக்கியமானவை. இந்த அமிலங்கள் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தியை ஆதரித்து சருமத்தின் உறுதி மற்றும் நெகழ்வை அதிகரிக்கிறது.
பளபளப்பு மற்றும் மென்மையாக்குதல்: தொடர்ச்சியாக வால்நட் எண்ணெய் பயன்படுத்தி வந்தால் முகத்திற்கு கூடுதல் பிரகாசம் கிடைக்கும். இதில் இருக்கும் சில பண்புகள் இறந்த சரும செல்களை அகற்றி புதிய தோலை வெளிப்படுத்த உதவுகிறது. இதனால் கரும்புள்ளிகள், முகப்பரு தழும்புகள் மற்றும் ஹைப்பர் பிக்மென்ட்டேசன் ஆகியவை மறைகின்றன. வால்நட் எண்ணெய் சருமத்தை மென்மையாக்கி எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
முகப்பருவுக்கு எதிராக செயல்படும்: வால்நட் எண்ணெய் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது முகப்பருவால் பாதிக்கப்பட்டுள்ள சருமத்திற்கு நன்மை பயக்கும். முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் இதனால் அழிக்கப்பட்டு, முகத்தில் ஏற்பட்டுள்ள வீக்கங்களைக் குறைக்க உதவும். வால்நட் எண்ணெயின் ஈரப்பதமூட்டும் பண்புகள் முகத்தின் இயற்கையான எண்ணெய் உற்பத்தியை சமநிலைப்படுத்த உதவுகிறது.
சருமத்திற்கு இவ்வளவு ஆரோக்கியங்களை அள்ளித் தரும் வால்நட் எண்ணெயை அவ்வப்போது சருமத்திற்குப் பயன்படுத்தி, முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருங்கள்.