அடர்த்தியான புருவம் இயற்கையாகவே அமைய வேண்டுமா? உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ்!

புருவத்தை பராமரிக்கும் முறை...
புருவத்தை பராமரிக்கும் முறை...

ழகான “வில்” போன்ற புருவம் இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் ஆசையாகவேயிருக்கும். கருமையான அடர்த்தியான புருவம் இயற்கையாகவே அமைய வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும்.

ஆண்களுக்கு எந்த அழகுப்பொருட்களும் பயன் படுத்தாமல் இருந்தாலுமே அழகான, அடர்த்தியான புருவம் இயற்கையாகவே வளரும். ஆனால் பெண்களோ புருவத்தை அழகுப்படுத்துவதற்காகவே தனி அக்கறை காட்டுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புருவத்தை அழகுப்படுத்த “திரெடிங்” போன்றவற்றை செய்து கொள்வார்கள். இதனால் புருவத்திற்கு அழகான வடிவம் கிடைக்கும்.

இயற்கையாகவே அடர்த்தியான புருவம் வளர்வதற்கு தேங்காய் எண்ணையையும், விளக்கெண்ணையையும் தினமும் இரவு தூக்க போகும் முன்பு தடவி விட்டு தூங்க வேண்டும்.

சின்ன வெங்காயத்தில் இருந்து எடுத்த சாரை புருவத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவி விடவும். வெங்காயத்தில் சல்பர் இருப்பதால் அது முடி வளர்ச்சிக்கு உதவும்.

கற்றாழை ஜெல்லை புருவத்தில் தடவி மசாஜ் செய்யவும். 30 நிமிடம் கழித்து கழுவி விடலாம். கற்றாழையில் விட்டமின் மற்றும் மினரல் உள்ளதால் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

ஆலிவ் ஆயிலை புருவத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவி விடவும். இது மாய்ஸ்டரைசராக செயல்பட்டு புருவம் வளர உதவும்.

வெந்தயத்தை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இரவு ஊர வைத்து எடுத்து கொள்ளவும். அதை நன்றாக அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். அந்த பேஸ்ட்டை புருவத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவி விடவும். வெந்தயத்தில் புரதமும் நிக்கோட்டின் ஆசிடும் இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவும்.

கிரீன் டீயில் காட்டனை வைத்து முக்கி  எடுத்து, அதை புருவத்தில் தடவி 10 நிமிடம் வைத்து கழுவி விடவும். கிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவும்.

புருவத்தை பராமரிக்கும் முறை...
புருவத்தை பராமரிக்கும் முறை...

புருவத்தை பராமரிக்கும் முறை:

* புருவத்தை மிருதுவாக சீவி பரமாரிக்க வேண்டும்.

* ருமத்தை எக்ஸ்பாலியேட் செய்வது போலவே புருவத்தையும் எக்ஸ்பாலியேட் செய்ய வேண்டும். இதனால் புருவத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் நீங்கும்.

* திகமாக புருவத்தை வேக்ஸிங், திரெடிங் செய்யாமல் தேவையற்ற முடிகளை நீக்க மட்டுமே இந்த முறைகளை பயன்படுத்தவும்.

* புருவத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு கன்டிஷனர் உள்ளது. அதை பயன்படுத்தலாம்.

* புருவத்தை வளர வைப்பதற்கு சீரம் உள்ளது. இது புருவம் வளர உதவும். காலை மற்றும் இரவு இரு வேளைகள் பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கும்.

இயற்கையாக அடர்த்தியான புருவம் இல்லாதவர்கள் மைக்ரோ நீடிலிங் போன்ற செயற்கை முறையை செய்து கொள்ளலாம். இந்த முறை சற்று விலை அதிகமாக இருந்தாலும் அழகான புருவத்தை பெறலாம். அத்துடன் புருவத்தை டாட்டூ செய்து கொள்ளும் முறையும் இருக்கிறது. அழகான வளைந்த புருவங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த முறைகள் ஒரு வரப்பிரசாதம் என சொல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com