தலைமுடி Hulk மாதிரி வலிமை ஆகணுமா? கற்பூரம் இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு?

Hair Care Tips
Hair Care Tips

தலைமுடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக இருக்கும். ஆனால் இன்றைய நவீன வாழ்க்கை முறையின் காரணமாக, அதைப் பராமரிப்பது கடினமாகிவிட்டது. அதுமட்டுமின்றி செயற்கைப் பொருட்களை அதிகமாக பயன்படுத்தினால் முடியின் இயற்கைத்தன்மை முற்றிலுமாக மாறிவிடும். இதன் காரணமாகவே பலர் இன்று இயற்கைப் பொருட்களை பயன்படுத்த விரும்புகின்றனர். 

இதுவரை நீங்கள் உங்களது தலை முடியைப் பராமரிக்க எத்தனையோ பொருட்களைப் பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் கற்பூரத்தைப் பயன்படுத்தி உங்களது தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? கற்பூர மரத்தில் இருந்து பெறப்படும் கற்பூரம் அதன் தனித்துவமான வாசனை மற்றும் மருத்துவப் பண்புகளுக்கு அறியப்பட்டதாகும். இது முடி வளர்ச்சியைத் தூண்டி, உங்கள் தலைமுடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்க உதவும். சரி வாருங்கள் இந்தப் பதிவில் கற்பூரத்தை தலைமுடிக்கு எப்படியெல்லாம் பயன்படுத்துவது எனத் தெரிந்து கொள்ளலாம். 

  • கடைகளில் கிடைக்கும் கற்பூர எண்ணெயை வாங்கி அதை தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயில் கலந்து தலையில் தடவி மசாஜ் செய்தால், உச்சந்தலை ஆரோக்கியமாக இருக்க பெரிதளவில் உதவும். இதனால் மயிர்க்கால்கள் ஊட்டம் பெற்று, ஆரோக்கியமாக இருக்கும். 

  • தலைக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது ஆரோக்கியமானது என்பது அனைவருக்குமே தெரியும். இதில் சிறு துண்டு கற்பூரத்தை சேர்த்து சூடாக்கி ஆறியதும் முடிக்கு தேய்த்தால், ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும். 

  • கற்பூரத்தை தயிரில் கலந்து முடிக்கு ஊட்டமளிக்கும் ஹேர் பேக் தயாரிக்கலாம். இதற்கு சிறிதளவு தயிர் எடுத்து அதில் கற்பூரம் சேர்த்து நன்றாகக் கலக்கி பேஸ்ட் போல உருவாக்கவும். இதை உச்சந்தலையில் தேய்த்து சுமார் அரை மணி நேரம் கழித்து தலை குளித்துவிடுங்கள். இது உங்கள் தலைமுடிக்கு இயற்கையான பிரகாசத்தைக் கொடுக்கும். 

இதையும் படியுங்கள்:
இரவில் கற்றாழை ஜெல் தடவினால் கிடைக்கும் 5 சரும நன்மைகள்!
Hair Care Tips
  • கற்றாழை ஜெல்லில் சிறிதளவு கற்பூரத்தை சேர்த்து இயற்கையான ஹேர் மாஸ்க் தயாரிக்கலாம். இந்த கலவையை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து நன்கு அலசவும். இதன் மூலமாக உங்கள் கூந்தலுக்கு அடர்த்தி அதிகமாகும். அதேபோல கற்பூரத்தை எலுமிச்சை சாற்றில் கலந்து தலைக்கு குளித்து முடித்ததும் தேய்த்து வந்தால், தலைமுடி புத்துணர்ச்சியாக இருக்கும். 

இப்படி உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக்க கற்பூரத்தை பல வழிகளில் பயன்படுத்த முடியும். இந்த வழிமுறைகளை முயற்சித்து உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com