திருமண நாள் அன்று அழகாக தெரியவேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கக்கூடிய ஒன்றுதான். அதற்காக என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும், எதை முன்கூட்டியே செய்யவேண்டும் என்பதை தெரிந்துக்கொண்டால் போதும் திருமணநாள் அன்று ஜொலிக்கலாம். இந்த டிப்ஸ் ஆண், பெண் இருவருக்குமே பொதுவானதாகும். இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1.ஹேர்கட்.
திருமண நாளுக்கு முந்தைய நாள் ஹேர்கட் செய்யாமல், ஒருவாரத்திற்கு முன்பே உங்களுக்கு பிடித்தமான ஹேர்கட்டை செய்துவிடுவது நல்லது. அப்போதுதான் திருமண நாளன்று நீங்கள் சகஜமாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் தெரிவீர்கள்.
2.ஸ்கின் கேர்.
முகத்திற்கு ஃபேசியல் செய்வது திருமண நாளுக்கு முந்தைய நாள் செய்யாமல், மூன்று நாட்களுக்கு முன்னரே செய்துவிடுவது சிறந்தது. அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்கு மூன்று மாதத்திற்கு முன்பிலிருந்தே ஸ்கின்கேர் ரொட்டீனை ஃபாலோ செய்வது நல்லதாகும்.
3.மேக்கப்.
திருமணத்திற்காக மேக்கப் செய்வதை திருமணநாள் அன்று முயற்சி செய்துப் பார்க்காமல் முன்பே எப்படி இருக்கும் என்பதற்கான Trial makeup போட்டுப் பார்த்துக்கொள்வது நல்லது. மேக்கப் ஆர்டிஸ்ட் Trial makeup போட முடியாது என்று கூறினால் மேக்கப் ஆர்டிஸ்டை மாற்றினால் கூட பரவாயில்லை. ஆனால், கண்டிப்பாக Trial makeup போட்டு பார்க்காமல் இருக்க வேண்டாம்.
4. சருமப்பிரச்னை.
உங்களுக்கு சருமம் சம்மந்தமான பிரச்னைகள் இருந்தால், திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே அதற்காக நல்ல Dermatologist ஐ பார்ப்பது நல்லது. அப்போதுதான் முன்பிலிருந்து சிகிச்சை செய்து பிரச்னைகளை தீர்க்கலாம். எனவே, திருமண நாளன்று பளபளப்பாக ஜொலிக்க முடியும்.
5.ஹைடரேட்டட்.
கடைசியாக, எல்லாவற்றையும் விட ரொம்ப முக்கியம் ஹைடரேட்டடாக இருப்பது. நிறைய தண்ணீர் குடித்து ஹைடரேட்டடாக இருப்பதால், உடல் மற்றும் சருமம் புத்துணர்ச்சி பெறுவதோடு மட்டுமல்லாமல் ஈரப்பதத்துடனும் இருக்கும். அப்போதுதான் மேக்கப் மற்றும் சருமப்பராமரிப்பு செய்தது அழகாக முகத்தில் தெரியும். இந்த 5 டிப்ஸையும் ஃபாலோ செய்து திருமண நாளன்று அழகாக ஜொலியுங்கள்.