அழகு சாதனப் பொருட்களைப் பாதுகாக்கும் வழிகளும் நம்மை அழகுபடுத்தும் வழிகளும்!

Beauty products & Beauty tips
Beauty products & Beauty tips
Published on

அழகு சாதனப் பொருட்களை நிறைய வாங்கி விட்டால் அவற்றை பராமரிப்பது கடினம். அப்படி வாங்கியவற்றை பராமரிக்கும் முறையையும் சில அழகு குறிப்புகளையும் இப்பதிவில் காண்போம். 

  • நெயில் பாலிஷை ஃபிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் காயாமல் இருக்கும். ஒரு வருடம் வரை இதுபோல் வைத்து பயன்படுத்தலாம்.

  • முக அழகு கிரீம்களை ஃபிரிட்ஜிலேயே போட்டு வைக்கலாம். முகத்தில் தடவும் போது சில்லென்று இருக்கும். சளி தொந்தரவு உள்ளவர்கள் தவிர்க்கவும். 

  • முகத்துக்கு போடும் லாக்டோ காலமைன் லக்மே காலமைன் போன்ற கிரீம்கள் பழசாகி, கட்டியாகி விட்டால் அதில் சிறிது ரோஸ் வாட்டர் விட்டு குழைத்தால் புதிய கிரீம் போல் ஆவதுடன் மனமுடன் இருக்கும். 

  • ஸ்டிக்கர் பொட்டை சுவரிலோ கதவுகளிலோ ஒட்டாமல் இரண்டு ஸ்டிக்கர் பொட்டுகளை ஒன்றுடன் ஒன்று ஒட்டி வைத்தால் ஒட்டும் தன்மை குறையாமல் பல நாட்கள் உபயோகிக்க முடியும். 

  • ஹேர் பின்கள் கடினமான அட்டையில் இருந்தால் அதை எடுத்து மெல்லிய பேப்பரில் வைக்கலாம் .இதனால்  அதன் வாய்ப்பகுதி திருகிக் கொள்ளாமல் நீண்ட நாள் உழைக்கும்.

  • கூந்தல் பறக்காமல் இருக்க பயன்படுத்தப்படும் ஹேர் ஸ்ப்ரே, ஜெல் போன்றவற்றையும் முடியை உலர வைக்க ஹேர் டிரையையும் அடிக்கடி உபயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது. செல் ஸ்பிரே போன்றவற்றை அதிகமாக வாங்காமல் இருப்பது நல்லது. 

  • மருதாணி விழுதுடன் சிறிது கோந்து கலந்து கொண்டால் உதிராது. 

  • சில சமயங்களில் சிலருக்கு கழுத்தில் நகை போட்டுக் கொள்ளும் இடத்தில் கருப்பாக கறையாக இருக்கும். இதற்கும் முகப்பவுடர் காரணமாக இருக்கலாம். எல்லா முகப் பவுடர்களிலும் ஜிங்க் ஆக்சைடு என்ற உலோகம் நுண்ணிய அணுக்களாக கலக்கப்படுகிறது. இது நகைகளில் இருக்கும் மிருதுவான உலோகங்களில் உரசி தேய்த்து, சருமத்தில்  கறையாகப் படியச் செய்கிறது. ஆதலால் முகப்பவுடற்போடுபவர்கள் அளவுடன் போட்டுக் கொள்வது நல்லது. இன்றைய காலகட்டத்தில் முகப் பவுடரை அதிகம் தவிர்ப்பவர்களையும் பார்க்க முடிகிறது. 

இதையும் படியுங்கள்:
கோடைகாலத்தில் ஏன் Sunscreen பயன்படுத்த வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 
Beauty products & Beauty tips
  • இடுப்பில் இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் இடுப்பை சுற்றி கருப்பு தழும்பு ஏற்பட்டுவிடும். இதற்கு தேங்காய் எண்ணெயை இடுப்பைச் சுற்றி தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தாலே போதும். மெதுவாக கருப்பு தழும்பு மறைய ஆரம்பித்து விடும்! 

  • கழுத்தில் கருவளையம் போக கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தை சுற்றிப் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து குளிக்கவும். தினசரி செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் போய்விடும். 

  • முல்தானி மட்டி உடன் பன்னீர் கலந்து வியர்க்குருவின் மேல் பூசி இரவு முழுவதும் விட்டு காலையில் குளித்தால் வியர்க்குரு ஓடிவிடும். தோலும் பளபளப்பாகும். 

  • குழந்தை பிறந்த உடனேயே வயிறு தளர்ந்து கோடுகளுடன் காணப்படும். இதற்கு வைட்டமின் ஈ எண்ணையை குளிப்பதற்கு முன்பும் இரவிலும் வயிற்றில் தடவி நன்றாக மசாஜ் பண்ண வேண்டும். இதை தினம் தோறும் செய்து வந்தால் நல்லது மட்டுமல்ல வயிறு அழகு பெறும்.

  • கண்ணில் கருவளையம் மறைய வெள்ளரி, உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு கலவையை துணியில் முடிந்து அந்த முடிச்சை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்து தூங்க வேண்டும். ஒரு வாரம் செய்தாலே போதும் கருவளையம் காணாமல் போய்விடும்.

  • இது போன்ற அழகு குறிப்புகளை பயன்படுத்தியும், அழகு சாதனப் பொருட்களை பாதுகாப்புடன் வைத்தும் வீணாக்காமல் பாதுகாத்து பயன்படுத்தலாம் . இது எல்லா காலத்திற்கும் ஏற்ற பயனுள்ள குறிப்பு ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com