ட்ரெண்டாகும் High waist ஜீன்ஸால் இவ்வளவு ஆபத்தா?

High waist ஜீன்ஸ்
High waist ஜீன்ஸ்
Published on

ஜீன்ஸ் நவீன கலாச்சாரத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆடைகளுள் ஒன்றாக மாறியது. ஆண்களுக்கு இணையாக பெண்களும் தற்போது ஜீன்ஸ் அணிந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள், High waist, Short ஜீன்ஸ் என வகை வகையாக பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது பெண்கள் விரும்பி அணியும் High waist ஜீன்ஸ் இடுப்புக்கு மேல் வரை போட வேண்டும். பொதுவாகவே சட்டை இடுப்பளவும், பேண்ட் இடுப்புக்கு கீழ் என்பதே இயல்பு. ஆனால் இந்த வகை ஜீன்ஸ் மட்டும் விளா எலும்பு இருக்கும் இடத்தில் இருந்து தொடங்கும். இந்த வகை ஜீன்ஸ் கால்களை உயரமாக காட்டுவதோடு, தொப்பையை மறைக்கவும் உதவுவதால் ஏராளமானோர் இதை விரும்புகின்றனர்.

வயிறு சுருக்கம்:

இறுக்கமாக இந்த வகை ஜீன்ஸை இடுப்புக்கு மேல் அணிவதால் அது வயிற்றை சுருக்கும். இதனால் செரிமான அமைப்பில் அசௌகரியம் உண்டாக வாய்ப்புள்ளது.

ஆசிட் ரிஃப்ளக்ஸ்:

வயிற்றில் அழுத்தம் கொடுப்பது, ஆசிட் ரிஃப்ளக்ஸ் உண்டாக வழிவகுக்கலாம். எனவே அடிக்கடி, அசிடிட்டி பிரச்சனை ஏற்பட்டால் இந்த வகை ஜீன்ஸை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

மலச்சிக்கல் பிரச்சனை:

மிகவும் இறுக்கமான ஜீன்ஸ் அணிவது மலச்சிக்கல் பிரச்சனைக்கு வழிவகுக்கும். அதிலும் குறிப்பாக வயிற்றை இறுக்கும் இந்த வகை ஜீன்ஸால் அதிக பிரச்சனை உருவாகும்.

உணவுக்கு பின் சிரமம்:

இந்த வகை ஜீன்ஸ் அணிவதால் உணவுக்கு பின் செரிமான பிரச்சினையை உணர்வீர்கள். இதை தடுக்க சாப்பிடும் போதாவது இந்த ஜீன்ஸை தவிர்ப்பது நல்லதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com