இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டரைக் கலந்து நன்றாக பேஸ்ட் போல் குழைத்து வைக்கவும். இதை நெற்றிப்பொட்டில் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் தடவி, காய்ந்ததும் கழுவ வேண்டும். இதை நன்றாக காயவைத்து பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் செய்து வந்தால், பொட்டு வைத்த இடத்தில் இருக்கும் கருமையை விரட்டலாம்.
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகிவிடும்.
சந்தனப்பொடியில் கற்றாழை ஜெல்லை கலந்து சற்று கெட்டியாக இருக்கும்படி குழைக்கவும். அதை நெற்றிப்பொட்டில் நடுவில் பற்றுபோல் குழைத்து பூசி, இவை உலர்ந்து உதிரும் வரை காயவிட்டு பிறகு பன்னீர் கொண்டு அந்த இடத்தை துடைக்க வேண்டும். இதனால் கருமை நிறம் மறைந்து சருமம் பொலிவு பெறும். தினமும் செய்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
ஸ்டிக்கர் பொட்டுகளைத் தவிர்த்து, நெற்றிக்கு குங்குமம் இட்டு வந்தால், நெற்றியில் கருமை படியாமல் காக்கலாம்.
சுத்தமான பசு வெண்ணெயை கால் ஸ்பூன் அளவு எடுத்து முகத்தில் நெற்றிப்பொட்டில் வட்டவடிவில் தேய்க்கவும். இது நெற்றிப்பொட்டில் இருக்கும் கருமையை நீக்குவதோடு வெப்பத்தினால் ஏற்படும் கட்டிக்கும் பலன் அளிக்கும்.