கேப்ஸ்யூல் வாட்ரோப் (capsule wardrobe) என்றால் என்ன? தெரிந்து கொள்வோமா?

கேப்ஸ்யூல் வாட்ரோப் (capsule wardrobe) என்றால் என்ன? தெரிந்து கொள்வோமா?

கேப்ஸ்யூல் வாட்ரோப்:

1970ல் சுசி ஃபாக்ஸ் என்ற ஃபேஷன் டிசைனர் தான் கேப்ஸ்யூல் வாட்ரோப் என்ற விஷயத்தை கண்டுபிடித்தார். இவர் தன்னுடைய பொட்டிக் ஷாப்பில் உயர்தரமான பலதரப்பட்ட ஆடைகளை விற்பனைக்கு வைத்தார்.

குறைந்த அளவு ஆடைகளை வைத்து மிக்ஸ் அண்ட் மேட்ச் முறையில் பலவிதமான வித்தியாசமான தோற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்தார். தற்போது ஃபேஷன் உலகில் கேப்ஸ்யூல் வாட்ரோப் ட்ரெண்டாகி வருகிறது.

ஏன் தேவை கேப்ஸ்யூல் வாட்ரோப்?:

ற்போது கேப்ஸ்யூல் வாட்ரோப்பின் தேவை அதிகரித்துள்ளது. ஏனெனில் பொதுமக்கள் பலதரப்பட்ட துணிமணிகளை வாங்கி குவித்து சூழ்நிலைக்கு கேடு விளைவிக்கிறார்கள். மேலும் பல விதமான பிராண்டுகளில் விதவிதமான டிசைன்களில் உடைகளுக்குத் தேவையிருப்பதால் ஃபேஷன் இண்டஸ்ட்ரியின் தயாரிப்பு சுமை அதிகரித்திருக்கிறது.

கேப்ஸ்யூல் வாட்ரோபில் என்ன இருக்கும்?

ண்களுக்கு; 5 ஷர்ட்டுகள், 4 பேண்ட்டுகள், இரண்டு ஜீன்ஸ், இரண்டு ப்ளேசர்கள் (கோட்), 3 ஜோடி ஷூக்கள். இதுவே வேட்டி அணிபவர் என்றால் 5 ஷர்ட்டுகள், 4 வேட்டிகள்.

பெண்களுக்கு: 5 டாப்கள் அல்லது குர்த்திகள், 4 பேண்ட்டுகள் (பட்டியாலா, லெக்கின்ங்ஸ்) இரண்டு ஜீன்ஸ், 3 ஜோடி ஷூக்கள் அல்லது செருப்புகள். புடவை அணியும் பெண்களுக்கு வெளியில் உடுத்த 10 புடைவைகள், தகுந்த மேட்சிங் ரவிக்கைகளுடன், வீட்டில் அணிய 5 செட் புடைவைகள். ஐந்தாறு பட்டுப்புடவைகளோ அல்லது டிசைனர் புடவைகளோ விழாக்கள், திருமண நிகழ்வுகளுக்குப் போதும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு உடைகளின் எண்ணிக்கையை மாற்றிக் கொள்ளலாம்.

கேப்ஸ்யூல் வாட்ரோபின் நன்மைகள்:

1. நமது தினசரிக் கவலைகளில் முக்கியமானது இன்றைக்கு என்ன உடை அணிவது என்பதுதான். அதை யோசித்தே நாம் களைப்படைந்து விடுவோம். அலமாரியில் தேடித் தேடி நேரவிரயமும் ஆகும். ஒரு சராசரிப் பெண் தன் வாழ்நாளில் சுமார் 287 நாட்களை என்ன உடை அணியலாம் என்று யோசிப்பதற்காக செலவிடுகிறாள் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

முன்பு நூற்றுக்கணக்கில் துணிகள் இருந்ததை விட கேப்ஸ்யூல் வாட்ரோபில் நல்ல தரமான, குறைந்த அளவு துணிகளை வைத்து மிக்ஸ் மேட்ச் செய்து மிகவும் அழகாக, கிரியேட்டிவாக புது விதமாக உடை அணியலாம்.

பராக் ஒபாமா, முகநூலை தோற்றுவித்த மார்க் ஜூகர்பெர்க் போன்றோர் குறைந்த அளவு உடைகளையே பயன்படுத்துவதாகவும், அதனால் மிக முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்த அதிக நேரம் கிடைப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்

2. ம் பர்சிலுள்ள பணத்தை பாதுகாக்க உதவுகிறது. பல மணி நேரம் ஷாப்பிங் செய்து, புதுப்புது டிசைன்களில் நிறைய பணத்தை செலவழித்து ஆடைகளை வாங்கிக் குவிப்போம். ஆனாலும் திருப்தி வராது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கிறது கேப்ஸ்யூல் வாட்ரோப்.

3. பூமிக்கும் இயற்கைக்கும் கேடாக, தேவையில்லாத துணிகளை குப்பையில் எறிகிறோம். குறைந்த அளவு துணிகளை வாங்கினால் குறைந்த அளவு தாக்கத்தையே ஏற்படுத்தும். துணிகளின் உற்பத்திக்கு உபயோகப் படுத்தும் ரசாயனங்கள் ஆறுகளிலும் கடலிலும் கலக்கப்படுவது குறைகிறது. பூமியின் சுற்றுப்புற சூழ்நிலைக்கு மிகவும் ஏற்றது கேப்ஸ்யூல் வாட்ரோப்.

4. நிறையத் துணிகளை துவைக்கத் தேவைப்படும் தண்ணீர், இஸ்திரி செய்ய செலவிடும் பணமும் குறைகிறது. குறைந்த துணிகளை சிறப்பாக பராமரிக்கலாம். அலமாரியில் கசகசவென இடத்தை அடைத்துக் கொள்ளாமல், துணிகளை நேர்த்தியாக அழகாக மடித்து அடுக்கி வைக்கலாம்.

கேப்ஸ்யூல் வாட்ரோப் அமைக்க – சில யோசனைகள்:

1. ப்போதும் பொருந்துகிற மாதிரி நியூட்ரல் வண்ணங்களான கருப்பு வெள்ளை, கிரே, நேவி ப்ளூ இந்த மாதிரி வண்ணங்களில் உடைகளை வாங்கினால் எளிதாக மிக்ஸ் & மேட்ச் செய்து போட்டுக் கொள்ள முடியும்.

2. மிகத் தரமான உடைகளை மட்டுமே வாங்க வேண்டும். அவை தான் நீடித்திருக்கும்.

3. ரு வருடமோ அல்லது இரண்டு வருடங்களோ கழித்து உங்கள் வாட்ரோபை மாற்றி அமைக்கலாம். உங்களுக்கு பொருந்தாத தேவையில்லாத ஆடைகளை யாருக்கேனும் தானமாகத் தரலாம். அல்லது ரீ- சைக்ளிங் முறையில் அவற்றை தலைகாணி உறைகள், பொம்மைக்கு ஏற்ற உடைகள், திரைச்சீலைகள் என மாற்றி அமைக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com