மழைக்காலத்தில் ஆண்கள் எப்படிப்பட்ட ஆடைகளை அணியலாம்? 

What kind of clothes can men wear in rainy season?
What kind of clothes can men wear in rainy season?
Published on

மழைக்காலம் என்பது பெரும்பாலானோருக்கு மகிழ்ச்சியான காலமாகும். ஏனெனில், குளிர்ச்சியான சூழ்நிலை நம்மை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். ஆனால், வெளியே செல்வோருக்கு இது முற்றிலும் கடினமான காலம். குறிப்பாக, ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதை சவாலாக்குகிறது. மழைக்காலங்களில் ஆண்கள் ஸ்டைலாகவும், வசதியாகவும் ஆடைகள் அணிய அவர்களுக்கு சில டிப்ஸ் தேவைப்படுகிறது. இந்தப் பதிவில் அதற்கான உதவிக் குறிப்புகளைப் பார்ப்போம். 

மழைக்காலத்தில் ஆடைகளை தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டியவை: 

மழைக்காலத்தில் பல அடுக்குகளைக் கொண்ட ஆடை அணிவது நல்லது. இது உங்கள் உடல் வெப்பநிலையை சரி செய்து கதகதப்பாக வைத்திருக்க உதவும். குறிப்பாக மழைநீர் உள்ளே புகாத, குளிர்ந்த காற்றைத் தடுக்கும் துணிகளை தேர்ந்தெடுக்கவும். பருத்தி, கம்பெனி மற்றும் பாலியஸ்டர் போன்ற செயற்கை இழைகளால் செய்யப்பட்ட உடைகள் சிறந்த தேர்வாக இருக்கும். அடர்த்தியான வண்ணமுடைய ஆடைகளை அணியும்போது, மழைநீரால் ஏற்படும் அழுக்கு மற்றும் கறைகளை எளிதில் மறைக்கலாம். 

ஆண்களுக்கான மழைக்கால ஆடைகள்: 

வாட்டர் ப்ரூப் மற்றும் விண்டு ப்ரூப் ஜாக்கெட்டுகள் மழையிலிருந்து ஆண்களை பாதுகாக்கும். குறிப்பாக ஹூடியுடன் கூடிய ஜாக்கெட்டுகள் கூடுதல் பாதுகாப்பை வழங்கக் கூடியவை. வெளியே செல்லும்போது டிரெஞ்ச் கோட்டுகள் மற்றும் ரெயின் கோட்டுகள் சரியானதாக இருக்கும். 

ஃபுல் ஸ்லீவ் சட்டைகள் நீங்கள் வெளியே செல்லும்போது உங்கள் கைகளை சூடாக வைத்திருக்க உதவும். எனவே, மழைக்காலங்களில் எப்போதும் முழுக்கை சட்டையை அணிவது நல்லது. நீங்கள் வீட்டில் இருக்கும்போது கதகதப்பாக உணர, ஹூடீஸ் மற்றும் ஸ்வட்டர்கள் அணியலாம். 

காட்டன் மற்றும் ஜீன்ஸ் வகை உடைகளும் மழைக்காலத்திற்கு ஏற்றவை. இத்துடன், வெளியே செல்லும்போது வாட்டர் ப்ரூப் பூட்ஸ் மற்றும் ஷூக்களை பயன்படுத்தினால், எப்போதும் உங்கள் கால்களை உலர்ந்த நிலையில் வைத்திருக்கலாம். 

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் எந்த வித வண்ணங்களில் உடை அணிந்தால் இதமாக இருக்கும் தெரியுமா?
What kind of clothes can men wear in rainy season?

மழைக்காலங்களில் வெளியே செல்லும்போது மழையில் இருந்து உங்களை பாதுகாக்க, ஒரு தரமான குடையை எப்போதும் கொண்டு செல்வது நல்லது. மழைநீர் உங்கள் முகத்தில் வழிவதை தடுக்க தொப்பி அணியுங்கள். அதிக குளிரை உணர்ந்தால் கைகளை சூடாகவும், உலர்ந்த நிலையிலும் வைத்திருக்க கையுறைகள் அணியலாம். இத்துடன், உங்கள் கழுத்தை சூடாக வைத்திருக்க ஸ்கார்ப் அணிவது நல்ல உணர்வை கொடுக்கும். 

மழைக்காலங்களில் இவ்வாறு சரியான உடைகளை தேர்ந்தெடுத்து அணிவதன் மூலமாக, உங்களது ஸ்டைலையும் சிறப்பாக வெளிப்படுத்தி, பாதுகாப்புடனும் கதகதப்புடனும் இருக்க முடியும். இந்த பதிவில் குறிப்பிட்ட டிப்ஸ் ஆண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com