ட்ரெஸுக்கு ஏற்ற நகையை எப்படி சூஸ் செய்யனும்?

மாதிரி படம்
மாதிரி படம்

நம் ஆடையும், அணிகலனும் தான் அழகுக்கு அழகு சேர்க்கும் ஒன்றாகும். நாம் வெறும் புது ட்ரெஸ் போட்டால் மட்டும் அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்காது. அதற்கேற்ப அணிகலன்கள் போட்டால் தான் மெறுகேற்றும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். தினமும் எந்த ஆடைக்கு எந்த நகை எடுப்பாக இருக்கும் என்று யோசிப்பதே பெண்களின் பெரிய விஷயமாக உள்ளது. மாற்றி போட்டு என்ன இந்த ட்ரெஸுக்கு போய் இந்த செயினை போட்டு வந்திருக்க என யாராவது கேட்டால் நமக்கே கஷ்டமாகிவிடும்.

பொதுவாகவே பெண்கள் காது, கை, இடுப்பு, கால் என அனைத்து இடங்களிலும் அணிகலன்கள் போட்டு கொள்கின்றனர், அதிலும், பணம் இருப்போர் வைரம் தங்கம், நடுத்தர பெண்கள் கவரிங், வெள்ளி, ஏழையான மக்களும் கூட பாசி வாங்கி அணிகின்றனர். அப்படி அனைத்து பெண்களும் தங்களுக்கு அழகு சேர்க்க அணிகலன்களை அணிந்து வருகின்றனர். அப்படி எந்த மாதிரியான ட்ரெஸ்ஸிற்கு என்ன அணிகலன் போடலாம் என பார்க்கலாம் வாங்க..

சதுர கழுத்து:

சதுர வடிவ கழுத்து டிசைன் கொண்ட ஆடைகளுக்கு, கனமான கழுத்தணிகள் அணிவது பொருத்தமாக இருக்கும்

ஹை ரவுண்டு கழுத்து:

கழுத்தை ஒட்டியதுபோல ஹை நெக் ரவிக்கை அணியும்போது, கழுத்தில் ஆபரணம் அணியாவிட்டாலும் அது அழகாகவே இருக்கும். அதனை ஈடுசெய்யும் விதமாக காதில் பெரிய அளவிலான காதணி அணிந்தால் பொருத்தமாக இருக்கும். டிசைன்கள் எதுவும் இல்லாத சாதாரண ரவிக்கை அணியும்போது, நீளமான செயின்கள் அணிவது ஏற்றதாக இருக்கும்.

V மற்றும் U வடிவ கழுத்து:

கழுத்தை ஒட்டியவாறு அணியும் சோக்கர் மாடல் நெக்லஸ்கள் V மற்றும் U வடிவ கழுத்து கொண்ட ஆடைகளுக்கு பொருத்தமாக இருக்கும். 'லேயர்டு ஜூவல்லரி' எனும் அடுக்கடுக்கான நகைகளும் உங்கள் தோற்றத்துக்கு அழகு சேர்க்கும்.

அகன்ற கழுத்து:

உங்கள் கழுத்துப்பகுதி முழுவதுமாக வெளியே தெரியும்படி இருக்கும் உடை அணியும்போது, பெரிய நெக்லஸ் வகை கழுத்தணி அணிந்தால் அழகுக்கு அழகு சேர்க்கும்.

வட்டக் கழுத்து:

வட்டக் கழுத்து கொண்ட பிளவுஸ் டிசைன்களுக்கு 'சோக்கர்ஸ்' என்று அழைக்கப்படும் கழுத்தை ஒட்டிய நெக்லஸ்கள் பொருத்தமாக இருக்கும். அதற்கு மேட்சிங்காக காதுடன் ஒட்டியதுபோன்ற சிறிய அளவு காதணிகள் அணிவது அழகாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com