வறண்ட சருமத்திற்கு ஏற்ற எண்ணெய் எது?

வறண்ட சருமத்திற்கு ஏற்ற எண்ணெய் எது?
Updated on

இந்த எண்ணெய் வறண்ட சருமத்தை சரிசெய்ய பெரிதும் உதவுகின்றன.

ஆர்கன் எண்ணெய்:

வறண்ட சருமத்துடனான உங்கள் போராட்டங்கள் ஆர்கான் எண்ணெயுடன் முடிவுக்கு வரலாம். இது உங்கள் சருமத்தில் சரும உற்பத்தியைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆன்டி-செபம் செயல்களை வழங்குகிறது. இந்த எண்ணெய் வறண்ட சருமம் மற்றும் முகப்பரு உட்பட பல்வேறு பிரச்ச்னைகளை சரிசெய்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது, அதை நேரடியாக உங்கள் சருமத்தில் தடவவும் அல்லது ஆர்கான் ஆயில் அடங்கிய ஃபேஸ் க்ரீமைப் பயன்படுத்தவும்.

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் வறண்ட சருமத்தை சரிசெய்ய உதவுகிறது, தேங்காய் எண்ணெய்யில் அதிக வைட்டமின் E மற்றும் K உள்ளது. பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக உங்கள் சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்தும்.

ஆலிவ் எண்ணெய்:

ஆலிவ் எண்ணெய் வறண்ட, வெடிப்புள்ள சருமத்திற்கு, குறிப்பாக குளிர்காலத்தில் மிகச் சிறந்த தேர்வு.. இது ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர் ஆகும், குறிப்பாக துளைகள் திறந்திருக்கும் போது ஈரமான தோலில் பயன்படுத்தப்படும். ஆலிவ் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.

திராட்சை விதை எண்ணெய்:

திராட்சை விதை எண்ணெய் வறண்ட, மந்தமான சருமத்தை ஈரப்படுத்தவும், சருமத்தின் நிறத்தை சமன் செய்யவும் பயன்படுகிறது.சருமத்தைப் பாதுகாக்கின்றன, ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகின்றன. கூடுதலாக, திராட்சை விதை எண்ணெயில் உள்ள அஸ்ட்ரிஜென்ட் உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது.

logo
Kalki Online
kalkionline.com