எந்த மாதிரி லிப்ஸ்டிக் போட்டால் நல்லா இருக்கும்? பெண்களின் அழகைக் கூட்டும் லிப்ஸ்டிக்!

lipstick that enhances the beauty of women
lipstick that enhances the beauty of women

சாதாரணமாக இருக்கும் பெண்கள் கூட லைட்டாக லிப்ஸ்டிக் போட்டால் போதும் அழகாக காட்சியளிப்பார்கள்.

அழகாக இருப்பவர்கள் பேரழகோடு திகழவும், நம் புற அழகை மேம்படுத்திக் கொள்ளவும் எத்தனையோ அழகு சாதனப் பொருட்கள் உள்ளன. இருப்பினும் சாமானியர்களும் பயன்படுத்தும் வகையில் தரமான லிப்ஸ்டிக் வகைகள் கிடைக்கின்றது. இது நம் அழகை கூட்டி காட்டுவது உண்மையிலும் உண்மை.

பல வண்ணங்களில் கிடைக்கும் லிப்ஸ்டிக்கை நம் நிறம், நம் முகத்தின் தன்மை, உதடுகளின் தன்மைக்கு ஏற்றார் போல் நல்ல நிறம் கொண்ட லிப்ஸ்டிக்கை தேர்வு செய்து பயன்படுத்தும்போது நம் அழகு பல மடங்கு கூடுகிறது.

லிப்ஸ்டிக் போடுவதால் நமக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. முக்கியமாக நம் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கிறது. நம்மைப் பற்றி நமக்கே ஒரு உயர்வான எண்ணம் தோன்றுகிறது. நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு வண்ணத்திற்க்கும் ஒரு குணாதிசயம் உண்டு. அடர் நிறத்தை விரும்பி பயன்படுத்த நம் நம்பிக்கை கூடுவதுடன் ஒரு அதிகார உணர்வும் மேலோங்குகிறது. நம்மால் சாதிக்க முடியும் என்ற திடமான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

லைட் கலர்ஸ்,  நிறமற்ற லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் அது ஒரு தனி அழகுதான். கண்ணைப் பறிக்காத மென்மையான கலர் மற்றவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும்.

முக அழகைக் கூட்ட லிப்ஸ்டிக்கை பயன்படுத்தும் போது நம் தோற்றம் , அழகு கூடுவதுடன், நம் பார்வையும் மற்றவர்களிடம் மாறும். ஒரு நல்லுணர்வு ஏற்படும். அனைவரிடமும் அன்பாக புன்முறுவலுடன் பழகத் தோன்றும். அதே போல் எதிர் தரப்பினருக்கும் நம்மை பற்றிய ஓர் எண்ணம்  தோன்றும்.

Applying lipstick
Applying lipstick

ஒரு மெஜஸ்டிக் தோற்றத்தை ஏற்படுத்தும் இந்த லிப்ஸ்டிக்கை இடத்திற்கு தகுந்தாற்போல் தேர்வு செய்வது அவசியம் .ஒரு இரவு நேர நிகழ்ச்சிக்கு, ஒரு அலுவலக நேர் காணலுக்கு, நண்பர்களை சந்திக்க போகிறோம் என்றால், பார்ட்டிக்கு என்று செல்லும் இடத்தை பொறுத்து லிப்ஸ்டிக்கை தேர்வு செய்வது அவசியம்.

லிப்ஸ்டிக் போடுவதற்கு முன் உதடுகளை வறண்டு போகாமல் இருக்கிறதா என பார்த்து ஈரப்பதம் கொண்டதாக ஆக்கிக் கொள்ளவும். பிறகு நம் உதட்டிற்கு பொருந்தும் லிப் லைனரை பயன்படுத்தி கடைசியாக லிப்ஸ்டிக்கை உதட்டின் மையப்பகுதியில் இருந்து அப்ளை செய்யவும். கூடுதலாக அப்ளை செய்திருந்தால் டிஷ்யூ பேப்பர் கொண்டு ஒத்தி எடுக்கவும்.

கடைசியாக ஒரு சூப்பர் லுக் கிடைக்க லிப் கிளாஸை (lip gloss)  பயன்படுத்தவும். ஆள் பாதி முகத்தோற்றம் பாதி. எனவே முகத் தோற்றத்தை மேம்படுத்தும் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தி மேலும் அழகாகலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com