
நம் சரும ஆரோக்கியத்திற்கு கொலாஜன் மிக அவசியமாகிறது. முகத்தில் சுருக்கம்,கோடுகள் மற்றும் தோல் தளர்வை இது தடுக்கிறது. கொலாஜன் நிறைந்த பானங்களை உட்கொள்வதன் மூலம் பளபளப்பான சருமத்தைப் பெறமுடியும்.
கொலாஜன் ஏன் அவசியம்
இது சருமத்தை தளரவிடாமல் நெகிழ்வுத் தன்மையோடு இருக்க வைக்கிறது.
சருமத்தை நீரேற்றத்துடன் வைக்கிறது.
இறந்த செல்களை நீக்கி புதிய செல் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
கோடுகள் சுருக்கங்களைத் தடுத்து இளமையைத் தருகிறது.
வைட்டமின் சி நிறைந்த கொலாஜன் பானம்
தேவையானவை;
ஆரஞ்சு ஜுஸ். 1கப்
கொலாஜன் பௌடர். 1 ஸ்பூன்
ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி
ஆரஞ்சு ஜுஸில் கொலாஜன் பௌடரைச் சேர்க்கவும். . இதில் ஒரு சிட்டிகை மஞ்சள்பொடி சேர்த்து காலை வேளையில் அருந்தவும். கொலாஜனை அதிகரிக்கவும், அழற்சியைப் போக்கவும் இது உதவுகிறது.
க்ரீன் டீ கொலாஜன் பானம்
க்ரீன் டீ. 1கப்
ஒரு டேபிள் ஸ்பூன் கொலாஜன் பௌடர்
தேன் ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை ஒரு துண்டு
க்ரீன் டீ தயாரித்து ஆறியதும் அதில் கொலாஜன் பௌடரைக் கலக்கவும். தேன் மற்றும் எலுமிச்சைச் துண்டு சேர்த்து அருந்தவும்.
க்ரீன் டீயில் ஆன்டிஆக்சிடண்ட்ஸ் தோலில் நெகிழ்வுத்தன்மை, மற்றும் நீரேற்றத்துடன் வைக்கிறது. இயற்கை அழகு மிளிரச்செய்யும் பானம் இது.
பெர்ரி கொலாஜன் ஸ்மூத்தி
ப்ளூ பெரி ,ஸ்ட்ரா பெரி மற்றும் ராஸ்பெரி. அரை கப்
ஒரு டேபிள் ஸ்பூன்.கொலாஜன் பௌடர்
பாதாம் பால் அரை கப்.
டேபிள் ஜாமூன்
சியா விதைகள். ஒரு டேபிள் ஸ்பூன்
தேன் ஒரு டீஸ்பூன்
ப்ளென்டரில் பெர்ரிகள்,கொலாஜன் பௌடர் பாதாம்பால் மற்றும் சியா விதைகளைப் சேர்த்து அரைக்கவும். பிறகு தேன் சேர்த்து அருந்தவும். பெர்ரி கொலாஜன் பௌடரிலும் உள்ள சி சத்து ,சியா விதையின்கொழுப்பு மற்றும் நார்சத்து தோலை நீரேற்றத்துடன் வைக்க உதவி புரிகிறது.
ஆலோ வேரா இளநீர் கொலாஜன் பானம்
ஆலோவேரா ஜுஸ். அரை கப்
இளநீர் ஒரு கப்
கொலாஜன் பௌடர் ஒரு டேபிள் ஸ்பூன்
புதினா இலைகள் கொஞ்சம்
ஆலோவேரா மற்றும் இளநீரை ஒரு கிளாசில் சேர்க்கவும். இதில் கொலாஜன் பௌடரைக்கலந்து இதில் புதினா இலைகளைப் சேர்த்து அருந்தவும். இளநீரும் ஆலோவேராவும் நீரேற்றத்தைத் தருகிறது. இந்த பானம் வறண்ட சருமத்திற்கும் சிறந்ததாகும்.
மாட்சா கொலாஜன் பானம்
தேவையானவை;
மாட்சா டு பௌடர் ஒரு டீஸ்பூன்
பாதாம் பால் ஒரு கப்
கொலாஜன் பௌடர் 1டேபிள் ஸ்பூன்
தேன். ஒரு டீஸ்பூன்
ஓரு பௌலில் மாட்சா பௌடரைச்சேர்த்து சிறிது சூடான நீர் விடவும். பாதாம் பாலை சூடாக்கி மாட்சா பேஸ்டை அதில் சேர்க்கவும். பிறகு தேன் மற்றும் கொலாஜன் பௌடரைச் சேர்த்து அருந்தவும்.
மாட் சாவின் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மிகவும் பொலிவான சருமம் பெறுவதற்கு ஏற்ற பானம் இது.
இக்கோடையில் உங்கள் சருமத்தைப் பாதுகாத்து பளபளப்பாக்க மேற்கூறிய கொலாஜன் பானங்களை அருந்தி பயன்பெறலாம்.